பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம்.கிர்திச் சார்கிஸ்யன் (1924) பெண்களே, நீங்கள் எப்படி மாறிவிட்டீர்கள்! நீங்கள் எப்படி மாறிப்போனிர்கள்! உண்மையாகவே நீங்கள் மாறிவிட்டீர்கள். நான் இளைஞனாக இருந்தபோது, பெண்கள் உங்களைப்போல் இருந்ததில்லை. காலம் முன்னேறுகிறது. நாங்கள் காலத்தோடு நகரவேண்டும் என்று நீங்கள் சொல்வீர்கள். இதை நான் அறிவேன். இயல்பாக, அது சரியானதே. ஆனல், அது மட்டுமல்ல விஷயம். என்னைத் தவருகப் புரிந்துகொள்ளாதீர்கள். உங்கள் குதி உயர்ந்த காலணிகளும், நாகரிக உடைகளும் மட்டுமே உங்களை மாற்றிவிடவில்லை. இல்லவே இல்லை! ஆண் களின் உடைகளில் நாகரிகமானவற்றைத்தான் நானும் அணி கிறேன். ஆனல் அது என்னே ஒரு அனுகூட அதிக நவீனமானவளுக ஆக்கிவிடவில்லை. இவ்விஷயத்தில் நான் தேர்ந்தெடுப்பதற்கு வேறு வகையில்லை என்பதுதான் காரணம் ஆகும். - ஆனால், நாம் விஷயத்தைவிட்டு விலகிவிட்டோம் என்று எண்ணுகிறேன். நான் சொல்லிக்கொண்டிருந்த விஷயத்துக்குத் திரும்புவதானல், பெண்களே, நீங்கள் ரொம்பவும் மாறிப் போனிர்கள். அதுவும் நல்லதுக்குத்தான். எனினும், நடந்த காரியங்கள் தங்களுக்காகப் பேசட்டும். அநேக வருஷங்களுக்கு முன்பு நான் எப்படிக் காதல் வயப்பட்டேன் என்பதையும், என் அண்டை வீட்டுக்காரனின் மகன் கேரன் சமீபத்தில் எவ்வாறு காதலில் ஈடுபட்டான் என்றும் உங்களுக்குச் சொல்கிறேன். என் காதல் எங்கள் நகரம் மிகப் பெரியது அல்ல. எங்கள் ஊரைப்போல் பதினைந்து நகரங்கள் சேர்ந்தால்தான் எரவான் போன்ற மாநகருக்கு ஈடாகக்கூடும். எங்களுக்கும் ஒரு கூட்டுப்பண்ணை இருந்தது. அதன் தலைவர் பெயர் கார்சோ. சரியாகச் சொல்வ தானல், துருவேறிய கிழட்டுக் கார்சோ. கார்சோவின் காரோட்டிதான் அவருக்கு இந்தப் பட்டப் பெயரை வைத்த தாகச் சொல்கிருர்கள்.