பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | 6 ரகசியப் பேச்சு குகை உச்சிக்குப் பேசிக்கொள்வதை அவன் பார்ப்பது வழக்கம். அவாக் தனது குகை உச்சியிலிருந்து கீழே இறங்க விரும்பியதும், ஹோவன்னஸும் அங்கே ஏறெடுத்துப் பார்க்காமலே கீழிறங் கிஞன். ஒருவரின் எண்ணங்கள் மற்றவரின் எண்ணங்களோடு செய்தி பரிமாறிக்கொண்டன. இந்தக் கணத்தில் எகோர் விஷயங்களின் நிலையைக் கிரகித்தான். உலகம் ஒரு பொருள். அவன் அனைத்தையும் கண்டான். உடனேயே, ஒரே பார்வையில். வர்ணங்கள் வர்ணங்களுக்குள் ஊடுருவின; பரிமாணங்கள் பரி மாணங்களுக்குள்ளும், செடிகள் செடிகளுக்குள்ளும் கலந்தன. பொருள்கள் பொருள்களோடு, ஒன்று மற்ருென்றுடன், கற்களும் மண்ணும், பூக்களும் செடிகளும், புதர்களும் முட்களும், எல்லாம் ஒரே ரகத்தில், அனைத்தும் ஒரே உரிமையோடு, சர்வமும் ஒரே அழகுடன் சேர்ந்தன. தன் எண்ணங்கள் இவ்வாறு, உடனடி யாகவும் ஒரே பார்வையிலும், கற்களே, பூமியை முட்களை, தன் தந்தையை, பிரயாணிகளைக் கேட்பதை எகோர் உணர்ந்தான். எகோரைக் கேட்கிறவர்கள், எகோரின் சோக எண்ணங்களிளுல் தான் தாங்களும் வருத்தம்கொள்கிருர்கள் என்பதை எப்படி அறிவார்கள்? எகோரின் வேதனை காரணமாகவே கல் உருளு கிறது; எகோரின் புதுப்பிக்கப்பட்ட அச்சம் காரணமாகவே மீன் ஆற்றில் மூழ்கி இறக்கிறது; எகோரின் திரண்ட சிந்தனைகள் காரணமாகவே மேகங்கள் திரள்கின்றன என அவர்கள் எவ்வாறு அறிதல்கூடும்? எகோர் மறுபடியும் தன் எண்ணங்களை நகரச் செய்தான். பிறகு புதிய நகரில் சிராபின் வீட்டைத் தேடிக் கண்டுகொண் டான். அதையே உற்றுநோக்கினன். வீட்டின்மீது முணு முணுக்கத் தொடங்கினன். ‘'சிராப், போனமுறை நீ என்மேல் கோபமாக இருந்தாய். நான் ஏதோ ஜாடையாகப் பேசுவதாக நீ எண்ணினாய். நான் எதைச் சொன்னேனே, அதையேதான் குறிப்பிட்டேன். என் மனசில் வேறு எண்ணம் எதுவும் இல்லை...”* அதன் பிறகு, சிராபின் வீட்டை அடுத்திருந்த நான்கு மாடிக் கட்டடத்தின்மேல் எகோர் தன் பார்வையைத் திருப்பினன். 'கார்ஜின், நீ ஏன் என்னைக் கேலி பண்ணுகிருய்? நான் ஷிஸ் விக்குடன் சேர்ந்திருப்பதில் கேலி பண்ணுவதற்கு என்ன இருக் கிறது? நாங்கள், இரண்டு முதியவர்கள், ஒன்ருக வசித்தால் என்ன? நாங்கள் நகரின் தூரத்து மூலைகளில் இருக்கிருேம். இனி மேல் ஒரே அறையில் வசிப்போம். இதில் என்ன தப்பு? இதில் கேலி பண்ண என்ன இருக்கிறது?... முடிவில், நீகூடச் சரியாகவே