பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 22 அம்மாவின் வீடு அதன் பிறகு அவன் எப்போதும் தனியாக ஒரு சாவி வைத் துக் கொண் டான். மாஸ்கோ, அயல்நாடு, அநேக வேலைகள். ஓ, நேரமே இல்லை...!' அவன் நான்கு மாதங் களாக அம்மாவைப் பார்க்கவில்லை! - வீட்டில் சாப்பிடுவதற்கு ஏதேனும் இருந்ததா? பொரித்த மொச்சைகள் இருந்தன-வாகனுக்குப் பிடித்த உணவு. வேறு தானியங்களும் இருந்தன. எதுவும் சூடாக இல்லை. ஆறிப்போன உணவை வாகன் உண்டான். மெல்லிசான கிராமத்து ரொட்டி இல்லை. நகரில் வாங்கி வந்த ரொட்டி இருந்தது. யார் வாங்கி வந்திருக்கக்கூடும்? நல்லது. இதுதான் கடைசி. அவன் அவளைத் தன்ளுேடு நகருக்குக் கூட்டிப் போவான். நீ அவளைக் கிராமத்தில் தனியாக விட்டிருக்கிருய். அயலார்கள் இப்போதே ரகசியமாகப் பேசுகிருர்கள். தனியாக... ஒரு நாள் இருந்துபார். நீ பைத்தியமாகிவிடுவாய்' என்று ஹாஸ்மிக் திட்டமாகக் கூறிவிட்டாள். மொச்சைப் பயறு, ஆறியிருந்தாலும் ருசியாக இருந்தது. அதைச் சூடுபண்ண அவனுக்குச் சோம்பல். அவன் சிறிது பிராந்தி குடித்தான். அது உள்ளே ஓடியது. ரத்த நாளங்களில் பாய்ந்து, தேகத்தின் சகல பாகங்களிலும் பரவியது. ஒருவித அசதி அவனைக் கவ்வியது. அவள் எங்கே போயிருக்கக்கூடும்? மருமகள் வீட்டுக்கா? அந்த ஊரில் இருந்த அவர்களின் ஒரே ஒரு உறவினள். அவனுடைய அம்மா வழி அத்தையின் மகள், அவளே அவன் மூன்று-நான்கு வருஷங்களுக்கு முன்பு பார்த்தது தான். அவள் பெயர் வாஸ்கானுஷ் ஆக இருக்கவேண்டும்; அல்லது மய்ரானுஷ். எதுவோ, 'அனுஷ்’ அதில் இருந்தது. அவளுக்கு ஏழு குழந்தைகள். அதை அவன் நிச்சயமாக நினைவு வைத்திருந்தான். ஏனெனில், ஏழில் ஆறு பெண்கள். மறுபடியும் டெலிபோன் அலறியது. இம்முறை அவன் உடனடியாக ரிசீவரை எடுத்தான். 'அம்மா வீட்டில் இல்லை. இது வாகன்.” 'வாகன், அருமைப் பையா!’’ ஒரு ஆண்குரல் பேசியது. 'ஹல்லோ. அராகெல் பேசுகிறேன்.” 'அராகெல்?’’ 'உனக்கு எப்படி நினைவிருக்கும்? நான் உன் அப்பாவின் நண்பன். நானும் அர்மெனக்கும்தான். அவன் நகருக்குப் போய்விட்டான். நீங்கள் ஒருவரை ஒருவர் பார்ப்பதில்லையா?” அவரை எப்படிக் கூப்பிடுவது? மாமா என்ரு?