பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏盛会 அம்மாவின் வீடு இருக்கும். குழந்தைப் பருவத்தில் அவர்கள் திராட்சைத் தோட்டங்களுக்குக் காற்று மாதிரி வேகமாய் ஒடுவார்கள். நெடுகத் தேடி ஆராய்ந்து, மறைந்து கிடக்கும் பழக்குலைகளைக் கண்டுபிடிப்பார்கள். அவை ஏற்கெனவே வெயிலில் நன்கு காய்ந்து, சுவையான உலர்ந்த திராட்சைகள் ஆகியிருக்கும். இப்போது ஏதாவது இருக்குமா? அவன் வெளியேறி, திராட்சைத் தோட்டத்துக்கு நடந்தான். அங்கே மூன்று, தான்கு பாத்திகள் இருந்தன. அவன் அம்மாவின் திராட்சைப் பாத்தியின் எல்லைகள் அவனுக்குத் திட்டமாகத் தெரியாது. அயலாரின் பாத்திக்குள் அவன் புகுந்திருக்கலாம். அதனால் தப்பு எதுவுமில்லை. திராட்சைத் தோட்டங்களில் எல்லேக்கோடுகள் இல்லை. நாய் ஏதாவது இருக்கலாம். தோட்டத்தில் அமைதி நிறைந்த மவுனம் நிலவியது. அவன் திராட்சைக் கொடிகளை ஆராயலானன். குனிந்து பார்த்தான். கிளேகளே மேலே உயர்த்தினன். ஒரு இடத்தில் சேருக இருந்தது. அவன் கால் வழுக்கியது. காய்ந்த மஞ்சள் இலைகள் மத்தியில் தலையைப் புதைத்து அவன் கண்களே அகல விழித்துப் பார்க்க நேர்ந்தது. அங்கே அது தென்பட்டது. கொடிகளிடையே ஆழ்ந்து புதைந்து, ஒரு கொத்து, மஞ்சளாய், பெரிய பழங்கள் நிறைந்து தொங்கியது. அந்தக் குலை எளிதில் வரவில்லை. அவனிடம் கத்தி இல்லை. அவன் மறுபடி முயன்ருன். பழக்குலை விடாமல் பற்றிக்கொண்டிருந்தது. அந்தக் கிளே முறிந்துவிடுமோ என அவன் அஞ்சினன். அம்மா வருத்தப்படுவாள். இறுதியில் அவன் வெற்றி பெற்ருன். பழக்குலே அவன் கைக்குக் கிடைத்தது. அது சூரிய ஒளியில் நன்ருக மினுமினுத்தது. அவன் பாத்தியின் வரப்புமேல் உட்கார்ந்து, பழங்களை அதிக ஆசையுடன் தின்னலானன். குழந்தைப் பருவக் குளிர்காலத்தின் இன்சுவை அந்தப் பழங்களில் இருந்தது. அல்லது, அவளுக அதை வருவித்துக்கொண்டானே? திராட்சைத் தோட்டங்களைத் தானே கவனிப்பதாகவும், கொத்துவது மூடுவது போன்ற வேலைகளில் அயலார் சிலர் உதவுவதாகவும் அம்மா சொல்லி யிருந்தாள். யார் உதவிஞர்கள்? முந்திய மாரிக்காலத்தில், பாரிஸ் நகரில் ஒரு இத்தாலிய உணவு விடுதியில், அவன் திராட்சைப் பழங்கள் கொண்டுவரச் சொன்னன். பழங்கள் பெரிதாகவும் தெளிவாகவும் இருந்தன. அவற்றினுள் இருந்த விதைகள், மீன்காட்சிசாலையில் காணப் படுகிற மீன் களைப் போல், நன்கு தெரிந்தன. அவை ருசியில்லாத திராட்சைப் பழங்கள். அதைக்கூட அவளுகவா எண் ணிக் கொண் டான் ? அல்லது, அது சுவையற்றே