பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூஷேக் கால்ஷோயன் 135 2. அலே-ஏஹ்...! அலெஹ், என் கண்ணே, அலே-ஏ-ஏஹ்...!’’ கிழவன் தனது கோலின்மீது சாய்ந்தவாறே பாட்டுப் பாடினன். அந்த வசந்தகாலத்தின் காலை வேளை வெகு நீலமாகவும் அழகாகவும் இருந்தது, ஏனெனில் அன்று சூரிய கிரகணம் நிகழ்வதற்கிருந்தது. அன்று காலை, பச்சைக் கம்பு வைத்திருந்த ஆடு மேய்ப்போன் கவனித்து, தன் சின்னஞ்சிறு அலெஹைக் கண்டான். ஆனல் அவன் அவளே இழந்துவிடுவான். அடுத்து அவன் ஐம்பத்தைந்து வருஷங்களுக்குப் பிறகு அவளைச் சந்தித்தான்... தன் இளைய மகனின் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது, திராட்சை மதுவை அவனே நேரில் போய்ப் பார்த்து ஆராரட் சமவெளியிலிருந்து கொண்டு வருவது என்று லோரோ தீர்மானித்தான். அவனுடைய மற்ற மகன்களுக்குக் கல்யாணம் நடந்தபோது அவனிடம் அவ்வளவாகப் பணவசதி இல்லை. ஆகவே, கல்யாணம் என்ற பெயரில் அவன் ஒரு சிறிய விருந்து மட்டுமே அளித்தான். ஆனால் இப்போதோ, கடவுளுக்கு நன்றி; அவன் நெருங்கிய நண்பர்களுக்கும் வெறுமனே தெரிந்தவர் களுக்கும், ஊர் முழுவதுக்குமே, தாராளமாகச் சாப்பாடு போடும் அளவுக்கு வசதி பெற்றிருந்தான். ஆராரட் சமவெளியிலிருந்து விசேஷமாகக் கொண்டுவந்த, தேர்ந்தெடுத்த ஒயினை, வீட்டில் சுத்தமாய்த் தயாரித்த திராட்சை மதுவை அவன் அனைவருக்கும் அளிக்க முடியும். தனிக் குடித்தனம் நடத்திய மூத்த மகனும், இரண்டாவது மகனும்-இவனும் தனியாகத் தான் வசித்தான்தொழிற்சாலையில் வடித்த ஒயினை வாங்கவேண்டும்-தொழிற் சாலையில் தயாரான ஒயினுக்கு வேறு எதுவும் ஈடாகாது-என்று அவனுக்கு வலியுறுத்தக் கடுமையாக முயன்ருர்கள். எனினும், ஸோரோ உறுதியாக இருந்தான். ஆராரட் சமவெளியிலிருந்துஆராரட் சமவெளியிலிருந்து மட்டுமே என்று அவன் சொன்னன். அவனே-லோரோவே-அதைத் தேர்ந்தெடுப்பான். மறுநாள் காலையில், அவன் தன் மகனின் பக்கத்தில் காரில் உட்கார்ந்து-இது அவனது இரண்டாவது மகன். அவன் சொந்தக் கார் வைத்திருந்தான்-சமவெளி நோக்கிப் போனன். அவர்கள் ஒன்றன் பின் ஒன்ருய்ப் பல கிராமங்களுக்குப் போய் வந்தார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் லோரோ பெரிய