பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூஷேக் கால்ஷோயன் A 47 வருடினன்; சட்டத்தில் தட்டினன். அடிமரத்தின் பின் பதுங்கி, எதிரொலிக்காகக் காத்துநின்ருன். அலெஹ் சன்னலுக்கு வர மாட்டாளா? அவள் வந்தால் அவன் அவளுக்குக் சைகை காட்டுவான். பிறகு அவன் அப்பால் நகர்ந்தான். மறுபடியும் சன்னலுக்குப் போனன். தட்டினன். மீண்டும் மரத்தின் பின் பதுங்கினன். இவ்விதம் திரும்பவும் செய்தான். ஆளுல் அலெஹ் தலைகாட்டவில்லை. தெருவில் குழந்தைகளைத் தவிர வேறு ஆட்கள் இல்லை. அது வசந்தகாலம். ஒவ்வொருவரும் ஏதாவதொரு வேலையில் ஈடுபட்டிருந்தனர். ஆகவே லோரோ முற்றத்திற்குள் போகவேண்டியதாயிற்று. அவன் உள்ளே அடி எடுத்து வைத்ததுமே அலெஹைக் கண்டான். ஒயின் சம்பவம் நிகழ்ந்த தினத்தில், மிளகின் சிவப்புச் சரங்களைச் சேகரித்துக்கொண்டிருந்தபடி அவளைப் பார்த்த அதே ஏப்ரிகாட் மரத்தைச் சுற்றிலும் காய்கறிச் செடிகள் நடப்பட்டிருந்தன. அலெஹ் மண்ணேப் பதப்படுத்திக் கொண்டிருந்தாள். அவள் மிகவும் சின்னவளாக இருந்தாள். தோளையும் கழுத்தையும் ஒரு பக்கமாய் சாய்த்துக்கொண்டு ஒரு மேட்டின்மீது உட்கார்ந்திருந்தாள்-அவள் இருந்த விதத்தில், ஸோரோவுக்கு அப்படித் தோன்றியது. அவள் இருந்த விதத்தில்-அவள் மண்ணைப் பதமாய்க் கிளறியபடி முணுமுணுத்துக்கொண் டிருந்தாள் என்று லோரோவுக்குத் தோன்றியது-பேச்சையோ, முணுமுணுப்பையோ அவன் கேட்கவில்லை-ஆலுைம், அலெஹ் உண்மையில் பா டி க் கொண் டி ரு ந் த த க அவனுக்குத் தோன்றியது. ஓ, அவனது புராதன நாட்டின் பாடல்களில் ஒன்றை, ஒயினுக்காக வந்த தினத்தில் அவன் பாடிய பாட்டுகளில் ஒன்றை அலெஹ் முணமுணத்துக்கொண்டிருந்தாள். ஸோரோவின் குரலைக் கேட்டதும் அம் முதியவள், அவள் வயதுக்கு வழக்கமில்லாத விதத்தில், உடனடியாக நிமிர்ந்து பார்த்தாள். "என் கண்ணே, அலெஹ்!’ ஸோரோ தன் கம்பை ஏப்ரிகாட் மரத்தின்மேல் சார்த்தினன். கிழவியின் கைகளைத் தன் உள்ளங் கைகளில் ஏந்திக்கொண்டான். அதிர்ஷ்டமுள்ள சந்திப்பு. நீ சிறிதாக, ரொம்பவும் சின்னவளாக வளர்ந்திருக்கிருய். அந்த நாட்களின் அலெஹைப் போல! தன் தலையை மலைகளின் பக்கமாக அவன் ஆட்டினன். 'சின்னஞ்சிறு அலெஹ் மாதிரி. உனக்கு நினைவு இருக்கிறதா?. அன்றும் இன்றுபோல் வசந்தத்தின் ஒரு நாள்தான். நினைவிருக்கிறதா?. நான் அதை