பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹ்ரான்ட் மாடவோசியன் # 73 'எப்போதாவது யாராவது ஒருவர். தெரியவில்லே? இடையில் ஒரு மாதிரி?’’ அவள் மவுனமாக அவனைக் கூர்மையாய்ப் பார்த்தாள். அப்பாவி, உவர்ந்துபோன மரியம், 'நீ எதற்காக ஒரு பசு வைத்துக்கொள்ள ஆசைப்படுகிருய், மரியம்? அதை விற்றுவிடு. கல்யாணம் பண்ணிக்கொள். அல்லது, உன் மகளோடும் மருமகளுேடும் போய் வசி. இந்தக் கடின வேலைகளை எல்லாம் செய்வதில் என்ன பிரயோசனம்? நீ ஒரு முறைதான் வாழ்கிருய், தெரியுமா. நீ பசு வளர்க்கக் கூடிய இனத்தைச் சேர்ந்தவள் இல்லை. இதுபோல் இனிமேல் மிகக் கனமான சுமையை இழுத்துச் செல்லாதே, அசடே. கேட்டாயா?’’ ஆண்ட்ரோ வீட்டைவிட்டு வெளியே வந்தான். தந்திரக்கார நரி ஜிக்கோர் பீயர் மரத்தின்கீழ், அவளைப் பார்க்காதவன்போல் பாசாங்குசெய்து உட்கார்ந்திருப்பதைக் கண்டான். 'நான் ஒரு காவல் நாய் வைத்திருக்க வேண்டும்.’’ என்று ஆண்ட்ரோ தனக்குள் சொல்லிக்கொண்டான். அவனிடம் ஒரு நாய் இருந்தது நினைவுக்கு வந்தது. ஆனல் அது மலேயில் மேய்ச்சல் நிலத்தில் இருந்தது. 'துரங்கிக்கொண்டிருந்தாயா ஆண்ட்ரோ?’’ "ஆமாம். ஆனல் மரியம் வந்து என்ன எழுப்பிவிட்டாள்.' கொட்டாவிவிட்டு அவன் மேலும் சொன்னன் : 'உலகத்தில் புதிதாக என்ன ஏற்பட்டிருக்கிறது?’’ 'உன் பீயர் பழங்கள் நன்முகப் பழுத்திருக்கின்றன.' 'எனக்குத் தெரியும், நீ ஒன்று பறித்துக்கொள்.' 'அவற்றைக் கடிக்க எனக்குப் பற்கள் இல்லை. உன் தேனிக்கள் நேர்த்தியாக இருக்கின்றன. என் ஈக்களுக்கு எல்லாம் வெறி பிடித்துவிட்டது. அவை கூட்டமாய் மொய்த்தபடி இருக் கின்றன. போன வருஷம் நல்ல கூடாக இருந்தது. ஆனல் இந்த வருஷம் அவை மொய்ப்பது தவிர வேறு எதுவும் செய்ய வில்லை. நீ வோட்கா தயாரிக்கப் போகிருயா?’’ பார்க்கலாம்.’’ 'பார்க்க என்ன இருக்கிறது? இவ்வளவு பழத்தையும் நீ என்ன செய்வாய்? அது கெட்டுப்போவதைப் பார்ப்பது அவமானம்... நான் உன்னை ஒரு உதவி கேட்க விரும்புகிறேன். ஆண்ட்ரோ. ஜிக்கோர் அவனை நேராகப் பார்த்தான்.