பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி. செய்துன்சியன் (1938) ஒவ்வொரு பத்திலும் ஒருவர் அவர்கள் சீக்கிரம் வருவார்கள்... 'புகைப்பதற்கு உன்னிடம் ஏதாவது இருக்கிறதா?” 'எனக்குப் பயமாக இருக்கிறது. நான் சாக விரும்ப வில்லை...' 'வாயை மூடு! ஒன்றும் நடவாது...” 'வீட்டில் பரண்மீது நான் ஒரு பாட்டில் விஸ்கி ஒளித்து வைத்திருக்கிறேன். அதை யாரும் கவனிக்கவில்லை என்ருல், நான் யுத்தத்துக்குப் பிறகு அதைக் குடிப்பேன்...' 'புகைப்பதற்கு உன்னிடம் ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டேன்...”* "நகரத்தில் செருப்பு தைக்கிறவன் ஒருவனே எனக்குத் தெரியும். யுத்தத்திற்குப் பிறகு நான் போய் அவனிடம் சேர்ந்து தொழில் பழகுவேன்.'

  • 'இப்போது என்ன நேரம்?...”*

அந்தப் போர்வீரர்கள் முகச்சவரம் செய்திருக்கவில்லை. வருத்தமாக இருந்தார்கள். குறைவாகப் பேசிஞர்கள். ஆளுல் சிலசமயம் அவர்கள் பேசியபோது, அதிக முக்கியமில்லாத மிகவும் சின்ன விஷயங்கள்பற்றிப் பேசினர்கள். ஆயினும் அனைவரும் கூர்ந்து கவனித்து ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டார்கள். அவர்கள் தங்களைப்பற்றிச் சொல்ல விரும்பி ஞர்கள். ஒரு விஷயத்தையே பலமுறை திரும்பச் சொன்னர்கள். ஒருவரும் குறைகூறவில்லை. அதை முன்பே கேட்டாயிற்று என்று எவரும் சொல்லவில்லை. அவர்களுக்குச் சலிப்புத் தந்தாலும்கூட, அவர்கள் பொறுமையோடு தொடர்ந்து கேட்டார்கள். எனினும், சிலசமயம் சிலபேர் குறுக்கிட்டு அவர்களே வாய் மூடவைப்பதும் சேர்ந்தது. 'போதும்: ஒவ்வொரு தடவையும் நீ அதே விஷயத்தைத் தான் சொல்கிருய்... உடனே மவுனம் நிலவும்.