பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர்கள்பற்றிய குறிப்புகள் 199 ஹோவன்னஸ் டூமேனியன் (1869–1923) டுமேனியன் ஆர்மேனியாவில், திசெஹ் என்ற கிராமத்தில், கிராம மதகுரு குடும்பம் ஒன்றில் பிறந்தார். திபிலிஸியில் ஒரு கல்விக்கூடத்தில் அவர் படித்தார். ஆளுல் பிழைப்புக்காக உழைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டதால் அவர் படிப்பை நிறுத்த நேரிட்டது. 1890-ல் டுமேனியனின் முதலாவது கவிதைத் தொகுதி மாஸ்கோவில் பிரசுரமாயிற்று. டூமேனியனின் படைப்பாற்றல் ஆர்மேனிய மக்களுக்குப் பெருமை தருவதாகக் கருதப்படுகிறது. அ வ ரு ைட ய கவிதைகள் 'அனுஷ்’, 'அஹ்த மார்’, 'பர்வாளு”, 'தும்காபெர்தாவைப் பிடித்தது’’, 'மாரோ', 'டேவிட் ஸாசன்கி’’ ஆகியவை மிகப் பிரபலமானவை. அவை ஆர்மேனிய மக்களால் மட்டுமன்றி, அனைத்து சோவியத் மக்களாலும் விரும்பப்படுகின்றன. ஹோவன்னஸ் டுமேனியன் குழந்தைகளுக்காகவும் எழுதினர். இவை மிக எளிமையாகவும் தெளிவாகவும் அமைந்திருக்கின்றன. அவெதிக் இஸ்ாகியன் (1875–1957) இஸாகியன் லெனிகைான் அருகில் உள்ள காலராபாத் என்ற கிராமத்தில் பிறந்தார். அலெக்ஸாண்ட்ராபோலில் இருக்கிற ஆர்மேனியன் மதஇயல் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ருர். எக்மியாத்ளினில் உள்ள கல்விச்சாலையில் தனது பயிற்சியை முடித்துக்கொண்டு, இஸாகியன் மேல் படிப்புக்காக வெளிநாடு சென்ருர், வீப்ஸிக் யுனிவர்சிட்டியில் சேர்ந்து, தத்துவம், மானிட இயல், மனித இன வரலாறு ஆகியவை சம்பந்தமான சொற்பொழிவுகளைக் கேட்டுத் தேர்ந்தார். உலக இலக்கியங்களையும் பயின்ருர், அந்தச் சந்தர்ப்பத்தில் இஸாகியன் கிரீஸிலும் இத்தாலி யிலும் அதிகம் சுற்றுப்பயணம் செய்தார். 1895-ல் தாய்நாடு திரும்பினர். 1911-ல் அவர் மறுபடியும் அயல்நாடு சென்ருர், 1928 வரை அவர் திரும்பி வரவேயில்லை. 1926-ல் அவர் சோவியத் ஆர்மேனியாவுக்கு வந்தார்.