பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiv எதிர்பார்த்துக் காத்திருக்கிருன். ஆர்ஷக்கை அவன்தான் பேணி வளர்த்துப் பெரியவன் ஆக்கினன். ஆர்ஷக் ಥೀFTಶ್ನಿಹಿತ್ತ வந்திருக்கும் செய்தியை அறிந்த முதியவன் அவனை அன்போடு வரவேற்க ஏ ற் பா டு கள் செய்கிருன். ஆனல் ஆர்வுக் நவஸார்த்தின் வீட்டுக்கு (அது அவனுடைய வீடும்தான்) வராமல், அவனைப் பார்க்காமலே கிராமத்தை விட்டு வெளியேறுகிருன். வேதனை தரும் இந்தச் செயல் முதியவனத் தீவிரமாக பாதிக்கிறது. வி. கெச்சூமியன் யுத்தத்திற்குப் பிந்திய கால உரைநடையில் வர்ணனைப் போக்கையும் உள்நாட்டு விஷய விவரிப்பையும் இணைத்தார். மத்திய ஆர்மேனியாவின் மொழி அம்சங்களும், மத்திய கால ஆர்மேனிய மக்களின் வாழ்க்கை விசித்திரங்களும் அவருடைய இந்தப் போக்கிற்கு ஆதாரமாக அமைந்தன. கெச்சூமியனின் படைப்புகளில் வாழ்ந்து செயல்புரியும் கதை மாந்தர்கள் மத்திய கால ஆர்மேனிய வாழ்வில் விசேஷமான வர்கள். எழுத்தாளர்கள், சிற்பிகள், ஒவியர்கள், குயவர்கள், பொதுவாகப் பல்வேறு தொழில்வினைஞர்களும் அவருடைய கதா பாத்திரங்கள். குழாய் செய்கிறவன்’ என்ற கதையின் நாயகன் நாணல் தட்டைகளினாலும் களிமண்ணுலும் குழாய் செய்கிற ஒரு தொழிலாளி. அவன் தனது தொழில் உலகத்திலும் அன்பிலும் ஆழ்ந்திருக்கிருன். கெச்சூமியனின் உரைநடை அதன் மொழி நயத்தால்-வார்த்தை அமைப்பு, வாக்கியக் கட்டுக் கோப்பு, வர்ணனைகள் ஆகியவற்ருல்-தனித்தன்மையோடு வசீகரிக்கிறது. இத் தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கும் கதை களில் விசேஷத் தன்மைகள் நன்கு புலளுகின்றன. மெக்கர்டிக் சார்கிஸ்யன் இரண்டாவது உலக யுத்தகால வாழ்வையும், மனிதரின் உளஇயலையும் அழுத்தமாகச் சித்திரிக்கும் நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகளை எழுதியிருக் கிருர், மொத்தத்தில், புத்த நிலைமைகளோடு தொடர்பு கொண்ட மனிதர்களின் வாழ்வுபற்றிய வரலாற்றை அவை உருவாக்குகின்றன. அதிலிருந்து ஒரு பக்கம் இங்குக் கதையாகத் தரப்பட்டிருக்கிறது. யுத்தத்தின் விளைவாக வாழ்க்கையின் இயல்பான போக்கும் சமநிலையும் சீர்குலைந்துவிடுகின்றன. எம். சார்கிஸ்யன் அந்த நிலைமையில் பயங்கரமான துன்பியலையும், சாவையும் அழிவையும் மாத்திரம் பார்க்கவில்லை; சாவின் கண்களை உற்று நோக்குகிற மனித ஜீவன்களிடம் தோன்றுகிற காதலையும் நகைச்சுவையையும் தமாஷ்களையும் அவர் திறந்த மனத்தோடு தேர்ந்தெடுக்கிரு.ர். சுருக்கமாகச் சொன்னல், புத்தத்தின் கொடிய துயரத்தைத் தாங்கிக்கொள்வதற்கு