பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டி, தெமிர்ச்யன் 贾器 ஒளிரும் வெண்ணிற மென்மையான ரொட்டியில் பொதிந்த சாறு நிறைந்த மசாலா இறைச்சி ஏதோ ஒன்று அவனது உதடு களின் வழியே உள்ளே புகும். பக்குவமாக உப்பிட்ட இறைச்சியின் ரசம் ரொட்டித் துண்டுகளே. ஊறவைத்து அவன் நாக்கிற்கும் தொண்டைக்குமிடையே இளகி ஓடும். சட்டென்று அவனது எச்சில் தொண்டையை நனைத்தபடி அவனுள் இறங்கும். அவன் இருமியவாறு விழித்துக்கொள்வான். விழிப்படைவான். பசித்த ஒநாயின் கண்களே ஒத்த அவனுடைய கண்கள் சுற்றுப்புறம் நெடுகிலும் சஞ்சரிக்கும். பயங்கரமான, கொடிய யதார்த்த நிலைமை அவனைத் தன் நினைவுக்குக் கொண்டு 6វត្ឆេ ... அவனுடைய பசி பெரும் கோபமாய் மாறும். அவன் துள்ளி எழுவான். முதலில், கிறக்கத்தினுல் தள்ளாடுவான். தயங்கியபடி நிற்பான். பிறகு கவரைப் பிடித்தபடி வெளியே முகப்புக்குப் டே சவான். அவன் துணைவி அவனுடைய வாழ்க்கையைச் சட்டை செய்வதில்லை; அவன் போக்குகள் பற்றிக் கவலைப்படுவதேயில்லை. அவன் குதிக்கலாம்; இஷ்டம்போல் எத்தனை தடவை வேண்டு மானலும் வெளியே போய்விட்டு உள்ளே வரலாம். அவனது செயல்கள் எதுவுமே அவன் மனைவிக்குப் புதுமையானது இல்லை. தச்சன் ஜிவிப்பதை விட்டுவிட்டான். அவனுடைய அசைவுகள், சொற்கள், செயல்கள் எல்லாமே ஏற்கெனவே தீர்மானிக்கப் பட்டவை; ஒரு சடங்கு மாதிரி, ஆயிரம் வருஷங்களாக இயங்கி வரும் ஒரு கிரியைபோல, திரும்பத் திரும்ப இயந்திர கதியில் நடைபெறுவனதான். அது அலுப்புத் தந்தது. இலையுதிர்காலத்தின் மழை மாதிரி சலிப்பூட்டியது. . பசித்த அந்த மிருகம் தன் மனைவியின் கவனத்தைக் கவர்வதற்கு என்ன செய்ய வேண்டும? அழிக்கமுடியாத ஒரு விதியின் தீர்ப்புக்கிணங்க அவள் கணவன் செய்ததையே செய்து கொண்டிருப்பான். அவன் வெளியே மாடி முகப்புக்குப் போவான்; வெயிலில் காய்வதற்காக ஒரு மூலையில் பரப்பி யிருக்கும் கறுத்த உருளைக்கிழங்குகளின் பக்கம் வருவான்: அவற்றை ஒவ்வொன்ருய் எடுத்து, நடுங்கும் கைகளில் வைத்துப் பரிசீலனை செய்வான்; நாக்கால் தொட்டுப் பார்ப்பான் கீழே போடுவான். பிறகு, தனது பிரம்பை எடுத்துக்கொண்டு படியிறங்கிக் கீழே போய்த் தெருப்பக்கம் செல்வான். எந்த