பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

சர்க்கரைக் கிண்ணம்

வைத்து நின்றபடி பொறுமையற்று இவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"நல்லது. உனக்குச் சம்மதம் இல்லையா?”

"நான்.... நீங்கள் பாருங்கள்..." என்று இளைஞன் ஆரம்பித்தான். இப்போதுதான் அவன் சிறையிலிருந்து வெளிவந்திருப்பதையும், அவனுக்கு உதவி தேவை என்பதையும் சொல்ல விரும்பினான். ஆனாலும், மீண்டும் பேசாமலே நின்றான்.

அவனிடம் அதைச் சொல்லி என்ன பயன்; அதனால் என்ன நன்மை?

"என்னை நம்பு. அதைவிட குறைக்கமுடியாது’’ என்று கடைக்காரன் அழுத்தமாகச் சொன்னன். 'நான் உனக்காகத் தான் விலையைக் குறைக்கிறேன். எப்பவும் நாங்கள் ஒரு ரூபிள் இருபது கோப்பெக் விலைக்கே விற்கிறோம். இப்போது நான் அதை உனக்குத் தொண்ணுாறு கோப்பெக்குகளுக்குத் தருகிறேன். சாமானைப்பற்றி ஒன்றும் சொல்லத் தேவையில்லை. அது ஓடெஸ்ஸா தயாரிப்பு. உறுதியான நயம் சரக்கு. நீ அதை உடைக்காமல் இருந்தால், அது இருபது வருஷங்கள் நிலைத்திருக்கும்.’’

இளைஞன் தயங்கியவாறு அசைந்தான்.

"பாருங்கள், நான் இப்போதுதான் சிறையிலிருந்து விடுதலையானேன். அதனால்... அவன் தொடர்ந்து பேச முயன்றான், ஆனால் கடைக்காரனை மீண்டும் பார்த்ததும், பிறகு சிறுவனை நோக்கியதும், அவன் நிறுத்தி விட்டான். மவுனமாக நின்றான்,

ஏபெல் மறுபடியும் அமைதியின்றி அசைந்தான். பாதிச் சாப்பாட்டில் எழுந்து வந்த ஒரு நபர், அல்லது அவசரமாக எங்கோ போகிறவர்தான் அவ்விதம் செய்ய முடியும்,

"அடக்க விலையே அதுதான். அதை வாங்கிய விலை அது...” என்று அவன் அவசரமாகச் சொன்னன்.

தன் ஊர்க்காரனுக்கு, தான் அதிருப்தி விளைவித்துக்கொண்டிருப்பதை அவன் குரலிலிருந்து இளைஞன் அறிந்தான். அந்தச் சிறுவனுக்கும் இவன் அதிருப்தி தந்துகொண்டிருக்கலாம் என்று தோன்றியது. சிறுவன் துடுக்காகவும் அகந்தையோடும் இவனே நோக்கினான். ஆகவே இவன் வெளியே போக நகர்ந்தான்.

"உனக்குப் பிடிக்கவில்லையா?" என்று கடைக்காரன் கேட்டான்.

இளைஞன் துணிவு கொண்டான்.