பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்செல் பாகுன்ட் (1899–1937) ஆல்ப் மல்ே வயலட் பூ காகவபெர்தா மலைச் சிகரம் வருஷம் முழுவதும் மேகங்களால் மூடுண்டிருக்கிறது. கோட்டையின் கரடுமுரடான சுவர்களே வெண்மேகங்கள் மறைக்கின்றன. அதன் உயரமான கரிய கோபுரங்கள் அங்குமிங்கும் தலைதுாக்கி நிற்கின்றன. தூரத்தி லிருந்து பார்க்கையில், மதில்புறங்களைக் காவல்காரர்கள் காத்து நிற்பது போலவும், கோட்டையின் பெரிய இரும்புக் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதாகவும், மலேமீது ஏறிவரும் ஒரு அந்நியன எந்த நேரத்திலும் ஒரு காவலன் தடுத்து அறைகூவக்கூடும் என்றும் தோன்றுகிறது. ஆல்ை, காற்று மேகங்களைச் சிதறடித்ததும், வெண்சிதறல்கள் கரைந்துவிட்டதும், முதலாவதாகக் கோபுரத்தின் சரிந்த உச்சி தென்படுகிறது. பின்னர், கவர்கள் மண்ணில் அரைவாசி புதைந்து காணப்படுகின்றன. அங்கே இரும்புக் கதவுகளும் இல்லை, காவலாட்களும் இல்லை. காகவபெர்தாவின் இடிபாடுகளில் நிசப்தம் ஆட்சிபுரிகிறது. கொந்தளிக்கும் பாஸ்ட் ஆறு கீழே உள்ள பள்ளத்தாக்கினூடே, குறுகலான பாறைகளின் நீலப் படிகங்களைப் பளபளப்பாக்கிய வாறு பாய்ந்து ஒடும் ஓசைதான் அங்குக் கேட்கிற ஒரே சப்தம். சுழலும் தண்ணீருக்கடியில் ஆயிரம் ஒநாய்கள் தங்களைப் பிணைத் திருக்கும் இரும்புச் சங்கிலிகளேக் கடித்தவாறு ஊளையிடுவது போல் தோன்றுகிறது. ... ஒரு ராஜாளியும் ஒரு கழுகும் சுவர்களில் கூடுகள் கட்டி யிருந்தன. காலடியின் சரசரப்புக் கேட்டதுமே அவை கடுரமாகக் கூச்சலிட்டபடி மேலே பறந்து, இடிபாடுகளுக்கு உயரே வட்ட மிடத் தொடங்குகின்றன. மலைப்பருந்து ஒன்றும் அவற்ருேடு சேர்கிறது. அதன் மூக்கு வளைந்த குறுவாளாகவும், அதன் கால் விரல்கள் கூரிய ஈட்டிகளாகவும், அதன் சிறகுகள் இரும்புக் கவசமாகவும் தோன்றுகின்றன. காகவபெர்தாவின் அத்தனை உயரத்தில் பூக்கிற ஒரே பூ வயலட்தான். அது ரத்தச் சிவப்பு நிறத்தில், மலைப்புருவின்