பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

தற்கால - கட்சி சார்பற்ற தமிழ்ப் பத்திரிகைகள்



கறையுளம் தூய்மை செய்வாய்!
களைப்பிலே ஊக்கம் பெய்வாய்!
நிறைபொருள் ஆவாய் ஏழை
நீட்டிய வெறுங்க ரத்தே

- ஏழைகள் பணத்தை எப்படி எல்லாம் பெறலாம்; அவர்களை வெறுங்கையர்கள் ஆக்கலாம்; அதற்காக எவ்வாறெலாம் எழுதலாம் என்ற கலைகளுக்குரிய ஏடுகளே மேலே உள்ளவை எல்லாம்! அந்த பத்திரிகைகளால் ஏழை அறிவா உயரும்? விற்பனைதான் பெருகும்; விலைதான் உயரும். இருபாலரும் பெருமை பெறார்.

விந்தன்

‘மனிதன்’

‘கல்கி’ பத்திரிகையிலும், ‘தினமணி’ கதிர் இதழிலும் ஆசிரியர் பொறுப்பிலே பணிபுரிந்த கோவிந்தன் எனப்படும் விந்தன், ‘மனிதன்’ என்ற இதழை நடத்தினார். அவர் என்ன சினிமா பெண்களை அட்டையில் அச்சடித்தர் தனது பத்திரிகை விற்பனையைப் பெருக்கினார்?

கோவிந்தன் மனிதர், புனிதர், மக்கள் அறிவை வளர்த்து வளமாக்கிட, ‘மனிதன்’ இதழை நடத்தி, ஒவ்வொரு பக்கத்தையும் வாழ்வியல் இலக்கிய ஊற்றுக் கண்களாக்கிடும் இதழியல் சிற்பியாகத் திகழ்ந்தார், குறை கூற முடியுமா அவர் ‘தினமணி கதிர்’, மனிதன் பத்திரிகை வேளாண் அறுவடைகளை?

பகீரதன்

‘கங்கை’

‘கல்கி’ பத்திரிகையிலே துணை ஆசிரியர் பணி புரிந்தவர்தான் பகீரதன்! அவர் ஆசிரியராக இருந்து நடத்திய இதழ்தான் கங்கை கங்கை! நீருக்கு ஆன்மீக உலகில் என்ன மரியாதை உண்டோ, மதிப்புண்டோ, அவ்வளவு மதிப்பு கங்கை இதழுக்கும் கற்றவர்கள் இடையே இருந்தது. பகீரதன், விந்தன் இலக்கிய ஆய்வுகளை, கட்டுரைகளைப்