பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

இராக்கெட்டுகள்


இயந்திரக் கோளாறு ஏற்பட்ட செய்தியைக்கேட்டதும் கானவெரால்[1] முனையிலுள்ள (Cape Canaveral) விண்வெளி மையத்திலிருந்த (Space centre) அறிவியலறிஞர்களும் தொழில் நுட்ப வல்லுநர்களும் அதற்குக் கழுவாய் (பரிகாரம்) காண்பதில் முனைந்தனர். கூப்பரது விண்வெளிப் பயணம் முடிய இன்னும் ஐந்து மணிநேரம்தான் மீதமிருந்தது. கூப்பர் பயணம் செய்கின்ற விண்வெளிக் கூண்டு போன்ற படியொன்றினை உடனே தயாரித்து அதில் கோளாறு எங்கு ஏற்பட்டிருக்கும் என்பதைக் கூப்பர் கூறிய தகவல்களைவைத்துக் கண்டறிந்தனர். பிறகு கூப்பர் உடனே மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளையும், எந்தச் சமயத்தில் இறங்கும் பயணத்தைத் தொடங்க வேண்டும் என்பதையும் விவரமான குறிப்புக்களை உருவாக்கினர். ஜப்பான் தீவுக்கருகில் ஒரு கப்பலிலுள்ள வானொலித் திசையறி நிலையத்திலிருந்து கூப்பருடன் உரையாடிக் கொண்டிருந்த கர்னல் ஜான் கிளென் (John Glenn) இவற்றைக் கூப்பருக்கு அறிவித்தார்.

மணிக்கு 17,500 மைல் (வினாடிக்கு 5 மைல் வேகம்) வேகத்தில் சென்று கொண்டிருக்கும் விண் வெளிக் கூண்டினைப் பாதுகாப்புடன் பூமியில் இறக்குவது மிக நுட்பமான செயலாகும். இந்த வேலை தாகை நடை பெறுவதற்கு இரண்டுவகை மின்சாரப் பொறிகள் கூண்டிலுள்ளன. இந்த இரண்டும் பழுதுபட்டதால் இத் தகைய கடும் வேகத்தைக் கட்டுப்படுத்திக் குறிப்பிட்ட தலத்தில் விண்வெளிக் கூண்டினே இறக்கும் செயலேக் கூப்பர் தம் கைகளினலேயே செய்து வெற்றிபெற்றிருப்பது ஒரு மாபெரும் சாதனையாகும். கூண்டு சரியானதோர்


  1. இன்று இது கென்னடி முனை என்று பெயர் மாற்றம் செய்யப் பெற்றுள்ளது.