பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

இலக்கியக் காட்சிகள்


எனவே காலம் தாழ்க்கிறது. கார்ப்பருவமும் வந்துவிட் டது. வேங்கை விரிமலர்களும் முல்லையும் பூக்கத் தொடங்கிவிட்டன. ஆனாலும் தலைவி தன் தலைவன் சொன்ன சொல் தவறமாட்டான்; கார்ப்பருவம் பொய்க் கோலம் புனைந்து நிற்கிறது எனத் தேறி நிற்கின்றாள். இத்தகு அருமையான வீட்டு வாழ்க்கையினைக் கவிஞன் இலக்கியத்தில் அமைக்கின்றான். இதனால் ஒப்புயர்வற்ற தலைவியின் நெஞ்சமும் அவன் தலைவன்மாட்டுக் கொண்ட பெரு நம்பிக்கையும் ஒருங்கே புலப்படக் காண் கின்றோம்.

தலைமகன் திரும்பிக் கறங்குமணி ஒலிக்கும் தேரில் விரைந்து வருகிறான். தேரை ஒட்டும் பாகனோ மிகவும் திறனுடையவன். பாரதப் போரில் பஞ்சவரில் நடுவணான பார்த்தனுக்குத் தேரோட்டிய பார்த்தசாரதியோ எனவும் ஐயறுகின்ற அளவுக்கு விரைந்து வயப்புரவிகளைச் செலுத் துகின்றான். ஆனாலும் தலைவனின் நினைவு காடு மலை தாண்டித் தலைவியை அடைந்துவிட்டது. திடீரெனத் திரும்பி, தேர் செல்லும் பாதையின் மருங்கே நோக்கினான் தலைமகன். புதர்களில் மலர்களில் மது உண்ண வந்த மது கரங்கள் மருட்சியடைந்து இங்கும் அங்கும் எழுந்து பறக் கின்றன. இதனைக் கண்டான் தலைமகன். நெஞ்சம் எரி யுற்ற இழுதென இரங்கிற்று. பாகனை விளித்துத் தேரை நிறுத்தச் சொன்னான. தேரின் மணி ஒலித்த ஒலியினால் கிலியடைந்த வண்டுக்கு இரங்குவான்போல், மணியின் நாக்குகளை எல்லாம் கட்டிவிட்டு அமைதியாகத் தேரைச் செலுத்தச் சொன்னான் தலைவன். இந்தச் சீரிய சித்திரத் திலே அந்நாளைய மக்களின் அருள் நெஞ்சம் காட்டப் படுகிறதன்றோ?

குரங்குளைப் பொலித்த கொய்சுவற் புரவி மரம்பார்த் தன்ன வாங்குவள் பரியப் பூத்த பொங்கர்த் துணையோடு வதிந்த