பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கெழிலன் ஞாயிறு எமக்கு? 107

தலைவன் இனிய செய்யினும் இன்னாதன செய்யினும் அவனையே அடைக்கலம் என நம்பி வாழும் பெற்றி வாய்ந்தவளாவாள்.

தாயுடன் றலைக்கும் காலையும் வாய்விட்டு அன்னா யென்னுங் குழவிபோல இன்னா செயினு மினிதுதலை யளிப்பினும் நின்வரைப் பினள்என் தோழி நின்னுறு விழுமம்:களைளுரோ விலளே.

(குறுந்தொகை: 397-5-8)

குலசேகராழ்வாரும் வித்துவக்கோட்டம்மானிடத்துத் தாம் கொண்ட ஆராக் காதலினை,

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன்போல், மாயத்தால் மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா நீ ஆளாவுன தருளே பார்ப்ப னடியேனே.

(பெருமாள் திருமொழி, 5-4)

என்று குறிப்பிடக் காணலாம்.

உலகில் தோன்றிய உயிர்கள் இறைவன் அருளால் தோன்றி, அவனருளால் அவன் தாள் வணங்கி வாழ் கின்றன. எனவே மீட்டும் இறைவனிடம், உங் கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்’ என்ற சொல்லை மீண்டும் புதுப்பித்துக் கொள்வது மிகையாகும். எனவே மார்கழித் திங்களில் வைகறையில் எழுந்து நீராடிச் சிவனைச் சிந்தை யிற்கொண்டு பாடிப் பரவும் பெண்கள் பழஞ்சொற் புதுக்க அஞ்சுகின்றனர். ஆயினும் சிவபெருமானிடத்துப் பின்வருமாறு கூறிக்கொள்கின்றனர்.