பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கெழிலென் ஞாயிறு எமக்கு? 109

மேலும்,

கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல் லாளே ஆய மகள்

(முல்லைக்கலி, 3, 63-64)

என்று சங்ககாலத் தலைவி வீரமில்லாத் தலைவனை மறுபிறவியிலும் மணம் புணர மறுக்கிறாள். திருவெம் பாவை காட்டும் தலைவியோ சிவபெருமானிடத்துச் சிந்தை தோயாத தலைவனைத் தழுவவும் மறுத்துவிடு கிறாள். மேலும், இத் திருவெம்பாவைப் பாடலில் கன்னிப் பெண்கள் எங்கொங்கை நின் அன்பர ல்லார் தோள் சேரற்க என்பதனால் இம்மைப் பயனையும், எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க என்பதனால் மறுமைப்பயனையும், கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க’ என்பதனால் வீட்டின் பத்தையும் விளக்கி நிற்றல் உய்த்துணரற்பாலனவாகும்.

எனவே, நாம் அனைவரும் சிவநெறி மறவாத சிந்தையராய், ஞாலம் அவன் புகழே மிக, நம் நெஞ்சத்தை அவன் வாழும் திருக்கோயிலாக்கி, அன்பர் பணிக்கு நம்மை ஆளாக்கிக் கொண்டால், இன்பநிலை தானே வந்து எய்தும் என்பது திண்ணம்.