பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ட்ெ கிந்தா ராமன் 11I

யாக விளங்குகிறது என்று கூறலாம். பாலகாண்டத்தில் தாடகை வதைப்படலம்; ஆரணிய காண்டத்தில் விராதன் வதைப்படலம், மாரீசன் வதைப்படலம்; கிட்கிந்தா காண் டத்தில் வாலிவதைப் படலம்; யுத்த காண்டத்தில் கும்ப கருணன் வதைப்படலம், இராவணன் வதைப்படலம் என்று அமைத்து, ஒவ்வொன்றிலும் வளர்ச்சி நிலை காட்டு கின்றார் கம்பர். பால காண்டத்தில் தாடகையின் இருப் பிடம், தோற்றம், வருகை, செயல் ஆகியவற்றைக் கண்ட பின்னும் இர்ாமன் அஞ்சியதாகத் தெரியவில்லை. அவளைக் கொல்வதற்குச் சற்றுத் தயங்கினான். ஆசிரியர் விசுவா மித்திரர், பொது நலம் கருதித் திருமாலும் இந்திரனும் பெண்னை அழித்ததனால் சிறுமையுறாமல் மேலும் சிறப்புப் பெற்றனர் என்பதை எடுத்துக் கூறிய பின்னர், இராமனும், அ. வ ைள அம்பொன்றினால் எய்து ஆட் கொண்டான் என்று பாடினார் கம்பர். அம்பு எய்யப்பட்ட அளவில் தாடகை வீழ்ந்தாள் என்றும்,

கூசிவா ளரக்கர் தங்கள் குலத்துயிர் குடிக்க வஞ்சி ஆசையாலுழலுங் கூற்றுஞ் சுவைசிறி தறிந்த தன்றே”

என்றும் கூறினார். இராமன் செய்த செயல் முறையானதே. என்பதை நமக்கு அறிவிக்க ஆசிரியர்,

..................விற்கொண்ட மழையனான் மேல் பூமழை பொழிந்து வாழ்த்தி விண்ணவர்

(போயினாரே’

(பாலகாண்டம்; தாடகைவதைப் படலம்; 72;

இறுதிச் செய்யுள்)

என்ற பாடற்பகுதியின் மூலமும்,

மைவண்ணத் தரக்கி போரின் மழைவண்ணத்

(தண்ணலேயுன்

கைவண்ணம் அங்குக் கண்டேன்

(பால காண்ட ம்; அகலிகைப் படலம்; 81)