பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ட்ெ கிந்தா ராமன் I 2 I

காண்டத்தில் இராமன் கூற்றாகவே ஒரு பாடலை அமைத் திருக்கின்றார்.

ஆகும் கல்வழி யவ்வழி யென்மனம் ஆகுமோ விதற் காகிய காரணம் பாகுபோன் மொழிப் பைங்தொடி கன்னியே யாகும் வேறிதற் கையுற வில்லையே

(பாலகாண்டம்; மிதிலைக்காட்சிப் படலம் : 147)

என்பது அப்பாடல்.

தாடகையைக் கொல்லத் தயங்கினான். பரசுராமனைச் கொல்லலாகாதென விடுத்தான். விராதன் பக்தி நிலை கொண்டு திருந்தித் துறக்கம் புகச் செய்தான். வாலியை மறைந்திருந்து கொல்வதால் பழியுண்டாகுமெனத் தெரிந்தால் கொல்வானா? எல்லாவகைப் பயிற்சியும் இளமையிலேயே பெற்ற இராமன் தனக்கு மாசு நேரும் படியானதொரு செயலைச் செய்யத் துணிந்திருப்பானா என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனோடு நேர்

(குறள்: 550)

அல்லவா? தண்டிக்கும் தகுதி அரச பரம்பரையில் உதித்த இராமனுக்கு உண்டு என்பதில் ஐயப்பாடில்லை. வாலி விடுத்த வினாவிற்கு இலக்குவன் வழி விடையிறுப்பதி லிருந்தே பொருட்படுத்தவேண்டாத ஒர் ஐயம் என்பதைக் கம்பர் உணர வைக்கின்றார். (வாலி வதைப்படலம், பாடல் எண் 177 நோக்குக).

இலக்குவன் மறுமொழி கேட்ட வாலியும் மீண்டும் மீண்டும் கேள்விக் கணைகளைத் தொடுப்பதை விடுத்து இராமனை வணங்கினான் என்றே உரைக்கின்றார் கம்பர்