பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிட்கிந்தா ராமன் 125,

மனைவியைப் பிரிந்து வருந்தும் நிலையிலுள்ள இராம ளிைன் சிந்தனையைக்கிட்கிந்தையின் பால் திருப்பி முறைமை பிறழ்ந்த வாலியை அழித்து அதன்மூலம் தன் ஆற்றலை மேலும் உருதிப்படுத்தி வாழ்வில் நம்பிக்கை ஒளி பெற்றுத் தேறியிருக்கின்றான் இராமன். ஒருவில், ஒருசொல், ஒரில் என்ற கொள்கையைத் தளரவிடாமல் தொடர்ந்து பெரு, மிதம் உள்ளவனாகவே காட்சியளிக்கின்றான். சொன்ன காலத்தில் சுக்கிரீவன் வாராதபோழ்தும் சினந்தானே யன்றிச் சீறிச் சாபமிடவில்லை.

குனமெனும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது.

(குறள் : 29)

எனவே தான் சினந்தான். அதுவும் கணப்பொழுதில் மறைந்தது.

சுக்கிரீவன் அணிகல முடிப்பைக் கொடுத்தபோழ்து இராமன் எல்லா மனிதர்களைப் போலவும் மூர்ச்சையுற்று வீழ்ந்தான். அவனைத் தேற்றிய பெருமை சுக்கிரீவனுக்குத் தான் உண்டு. ஏனெனில், அவனும் மனைவியைப் பிரிந் தவனாயிற்றே! கம்பருடைய தனித்தன்மை இங்கும் ஒளிர் வதைக காணலாம.

கிட் கிந்தா காண்டத்து இராமன் தொடக்கம் முதல் இறுதிவரை மனிதனாகவே காட்சிதந்து செயற்கருஞ் செயல் புரிந்து, அறம் வெல்லவும் பாவந் தோற்கவும் தன்னால் இயன்றதையெல்லாம் செய்தான். தனித்திருக்கும் போழ்து சீதையின் பிரிவுக்கு வருந்தினானேயன்றிப் பிறரி டம் தன் கதையைக் கூறி ஒலமிடவுமில்லை, தன் துயரையே நினைத்துப் பிறர்க்குதவாமலும் இல்லை என்பது வெள் ளிடை மலை.