பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

இலக்கியக் காட்சிகள்


வீழ்தும்பி வண்டொடு மிஞறார்ப்பச் சுனை மலரக் கொன்றை கொடியின ரூழ்ப்பக் கொடிமலர் மன்றல் மலர மலர்காந்தள் வாய்காற நன்றவிழ் பன்மலர் கால கறைபனிப்பத் தென்றல் அசைவ ரூஉஞ்செம்மற்றே யம்மரின் குன்றத்தாற் கூடல் வரவு.

(பரிபாடல் , 8 : 1.5-28).

கார்காலத்து மேகத்தின் முழக்கத்தை யொத்து மதம் கொண்ட யானை பிளிறுகின்றது. அப் பிளிறலைக் கேட்டுக் கோழி பயந்து குன்றெதிர் கூவுகின்றது. இவ்விரு வொலிகளும் ஒலியும் எதிரொலியும் போலமைந்து மலை முழைக்கண் ஒயாமல் ஒலியெழுப்பிக் கொண்டிருக்கின் றன எழுதுளை வங்கியத்தும், ஐந்து துளை வங்கியத்தும், யாழினும் பிறந்த இசைச்சுருதியினை யொத்து, நிறத்தா லொத்த இனம் விரும்பும் தும்பியும், வண்டும், மிஞ்றும் ஆரவாரிக்க, சுனை, பூக்களை மலர்வித்து நிற்க, கொன்றை கொத்துக் கொத்தாகப் பூக்களைப் பூத்துக் குலுங்க, கொடி ம ல ர் க ள் மன்றலையுடையனவாய் மலர, மலர்ந்த காந்தட்பூ இடமெங்கும் மணம் பரப்ப, முற்ற மலர்ந்த பன் மலர்கள் தேன் துளிர்ப்ப நாற, அந்நறுமணத்தினோடு தென்றல் அசையும் தலைமைத்து, நின் குன்றத் தொடு கூடவிடை வழி என்று ஆசிரியர் நல்லந்துவனார் தென்றலின் இனிய புது வரவினைப் பொலிவும் வனப்பும் ஒருங்குசேரப் புலப்படுத்தி யுள்ளார்.

அகநானுாற்றிலே, தென்றல் குறித்து இரண்டு அழ, கோவியங்கள் காணக் கிடக்கின்றன. காவன்முல்லைப் பூதனார் பாடியுள்ள பாலைத்திணைப் பாடலொன்றில் பாலை வழிச் செல்லும் மன்னர்க்குத் தென்றல் செய்யும் தொண்டு சுட்டப்படுகின்றது.