பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

இலக்கியக் காட்சிகள்


கோதை மாதவி கொழுங்கொடி எடுப்பக் காவும் கானமும் கடிமலர் ஏங்தத் தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து மன்னவன் கூடன் மகிழ்துணை தழுவும் இன்னிள வேனில் யாண்டுளன் கொள்?

(சிலப்பதிகாரம்; ஊர்காண் காதை : 1.13-117) ஐந்திணை ஐம்பது என்னும் பதினெண் கீழ்க்கணக்கு நூலில், ஆற்றாமையே வாயிலாகப் புக்க தலைமகன் கூடி நீங்கிய பின்பு, சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லி யது’ என்ற கருத்தில் அமைந்துள்ள பின்வரும் பாடலிலும் தென்றலின் இனிமை போற்றப்படுகின்றது.

குளிரும் பருவத்தே யாயினுந் தென்றல் வளியெறியின் மெய்யிற் கினிதாம்-ஒளியிழாய்! ஊடி யிருப்பினும் ஊரன் நறுமேனி கூடல் இனிதா மெனக்கு.

(ஐந்திணை ஐம்பது : 30)

குளிர் காலத்தில் தென்றல் வீசினும் அத் தென்றல் உடம்பிற்கு இனிமை பயத்தல் போல, ஊடியிருப்பினும் தலைமகனோடு கூடல் எனக்கு இனிதாயிருக்கின்றது என்று தகைமகளின் கூற்றில் தென்றல், எக்காலத்தும் எவராலும் ஏற்கப்படுவதொன்று என்பது புலனாம்.

‘காணி நிலம் வேண்டும்’ என்ற இனிய பாட்டில் ‘பாட்டுக்கொரு புலவன் பாரதி’ தான் விரும்பும் இனிய வாழ்க்கையினை எடுத்துமொழியும் பொழுது இளந் தென்றலை மறவாது குறிப்பிட்டுள்ளமையினைப் பின் வரும் பாடலிற் காணலாம்.

காணி நிலம் வேண்டும்-பராசக்தி காணி நிலம் வேண்டும்-அங்கு தூணில் அழகியதாய்-கன் மாடங்கள் துய்ய நிறத்தினதாய்-அந்தக்