பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரட்சணிய யாத்திரிகத்தின் இலக்கியச் சிறப்பு 1.37

மென்னெஞ்சன், சகாயன், காமமோகிதன், பிரபஞ்சன் அழிம்பன் , நிதானி, துார்த்தன், நம்பிக்கை விடாத கண்டன், கார்வண்ணன், விமலன், அறிவீனன், நிலை கேடன், அறப்பகை, கண்ணிலி, நன்றிலி, குரோதி, காமி, வீணன், துணிகரன், வம்பன், விரோதி, சழக்கன், நிட்டுரன், இருட்பிரியன், முழுப்பொய்யன், விவேகி, யூகி, பக்தி சிநேகி எனவரும் பாத்திரங்களின் பெயர்கள் எல்லாம் பண்பு உருவகப் பெயர்களே. நம்பிக்கை இழவு உளையாகவும் மரணம் ஆறாகவும் துன்பமும் அறமும் மலைகளாகவும் தாழ்வு பள்ளத்தாக்காகவும் உருவகிக்கப் பட்டுள்ளன. மாயாபுரி, சோகபுரி, தர்மசேத்திரம் முதலானவும் உருவகங்களே.

மனத்தில் நன்மை, தீமைக் கூறுகளே நல்ல மாந்த ராகவும், தீய மாத்தராகவும் இக் காவியத்தில் உருவக மாகப் படைக்கப்பட்டுள்ளன. கிறித்தவன், அழிம்பனோடு செய்யும் போர், ஒர் உருவகப் போரே. கடுமுகம், கார்முகம்: வசை, அன்பு, ஆசி ஆகியன கிறித்தவன் எய்யும் எதிர் அம்புகளாகவும் கூறப்பட்டுள்ள யாவும், உருவக அணியின் பாற்படும். அழிம்பன் மார்பில் வாளைப் பாய்ச்சி ஆன்மிகன் வெல்வது, தீய மனத்தை நன்மனம் வெற்றி கொள்வதாகும்.

உவமைச் சிறப்பு

இலக்கிய ஆசிரியனின் உணர்த்தும் திறனை அவன் கையாண்டுள்ள உவமைகளாலே எளிதில் அறிந்து கொள்ள முடியும். சிறந்த உவமைகள் எண்ணிறந்த அளவில் இக் காவியத்தை அழகு செய்கின்றன.

மோட்ச நாட்டிற்குச் செல்லும் வழியறியாது ஆன் மிகன் இருதலைக் கொள்ளி இடையுற்ற எறும்பெனத்