பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தின் நோக்கங்கள் 15

உண்டா லம்ம இவ் வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே

(புறம்; 182 : 1:3) என்ற புறநானு ற்றுப் பாடலும்,

நின்னயந் துறைார்க்கும் கேயந் துறைார்க்கும் பன்மாண் கற்பினின் கிளைமுத லோர்க்கும் கடும்பின் கடும்பசி தீர யாழரின் நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி யோர்க்கும் இன்னோர்க்கு என்னாது என்னொடுஞ் சூழாது வல்லாங்கு வாழ்தும் என்று எண்ணாது எல்லோர்க்குங் கொடுமதி மனைகிழ வோயே

(புறம்; 163)

என்ற புறப்பாடலும், என்பொருளும் என்பொருளே: எல்லார் பொருளும் என் பொருளே’ என்ற கொள்கை உடையார் நெஞ்சம் நாணித் தன் பொருளையும் பிறர் பொருளாகக் கருதும் மனப்பண்பாடும் வளர்வதற்கு வழி வகுக்கின்றன.

ஈயென இரத்தலின் இழிவினையும், கொள்ளெனக் கொடுத்தலின் உயர்வினையும்,

ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று கொள்ளனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று

(புறம்; 204 : 1-4)

என்ற புறப்பாடல் நவில்கின்றது, ஒருவன் தான் சொல்லிய சொல்லினின்றும் திறம்பாது நிற்றலே அறம் என்பதை,