பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலும் கலமும் 3 I

பொன்மலிந்த விழுப்பண்டம் நாடார நன்கிழிதரும் ஆடியற் பெருநாவாய்.”

சிறந்த நாவாய்கள் குதிரைகளைக் கொண்டுவந்து இறக்குமதி செய்தன. யவனம் முதலிய தேயத்திலுள்ளார் விரும்பியணியும் பேரணிகலங்களை இ ங் கி ரு ந் து ஏற்றுமதி செய்தன.

விழுமிய நாவாய் பெருநீ ரோச்சுநர் நனந்தலைத் தேஎத்து நன்கல னுய்ம்மார் புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொ டனைத்தும்.க.

பெரிய கப்பல்களை வங்கம் என்று மதுரைக் காஞ்சி குறிப்பிடுகின்றது. இழையணிகளைத் துரதேயங்களுக்குக் கொண்டு விற்றுவிட்டு இரவு நேரத்தில் இருங் கழியை யடையும் வங்கங்களில் வந்திறங்கிக் கரையைச் சேரும் வணிகரைப் பற்றி மதுரைக் காஞ்சி பின்வருமாறு அழகு. பட விவரிக்கின்றது:

வாலிதை யெடுத்த வளிதரு வங்கம் பல்வேறு பண்ட மிழிதரும் பட்டினத் தொல்லெ னிமிழிசை மானக் கல்லென நனந்தலை வினைஞர் கலங்கொண்டு மறுகப் பெருங்கடற் குட்டத்தப் புலவுத்திரை யோதம் இருங்கழி மருவிப் பாயப் பெரிதெழுந்து.’

பதிற்றுப் பத்தும் இங்குக் கூறப்பட்ட செய்திக்குச் சான்று பகர்கின்றது.

14. மதுரைக் காஞ்சி ; 77-83 15. மதுரைக் காஞ்சி : 321-323 16. மதுரைக் காஞ்சி : 536-541