பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலும் கலமும் 3.3

கலம் எண்ணும் கன்னியர்

எட்டுத் தொகை நூல்களில் கப்பல்கள் “கலம்’ என்ற

சொல்லால் குறிக்கப்பட்டுள்ளன. குறுந்தொகைப் பாட் டொன்றில் கடலும் கலமும் சுட்டப்படுகின்றன.

து : தெண்டிரைக் கடலாழ் கலத்தில் தோன்றி மாலை மறையுமவர் மணிநெடுங் குன்றே.’

மாலையில் மறையும் மணிநெடுங் குன்றிற்குக் கடலில் மெல்ல மெல்லக் கரையிலிருக்கும் நம் கண்பார்வை யிலிருந்து மறையும் கலம் உவமையாகச் சொல்லப்பட் டிருக்கக் காணலாம். =

சங்குகள் கரையின்கண்ணே திரிய, கடல் எழுந்து ஆரவாரிக்கும் ஒலிபரந்த குளிர்ந்த துறைக்கண் கலங் களைப் பரதவர் செலுத்துவர் என்று ஐங்குறுநூறு குறிப்பிடும்:

கோடுபுலங் கொட்பக் கடலெழுந்து முழங்கப் பாடிமிழ் பணித்துறை யோடுகல முகைக்கும்.”

காற்றால் அடித்துக் கொணரப்பட்ட இத்தகைய மரக்கலங்களைக் கடல் சார்ந்த நெய்தல்நிலப் பகுதியில் வாழும் பரதவர்குலப் பெண்கள் எண்ணுவார்கள்.

கடலே, கால்தந்த கலனெண் ணுவோர் கானற் புன்னைச் சினை நிலைக்குங்து.*

21. குறுந்தொகை : 240

22. ஐங்குறுநூறு : 192 : 1-2

23. புறநானூறு : 386 : 14-15

இ. கா.-3