பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலும் கலமும் 35

கலிச்சும்மைய கரைகலக்குறுந்து கலந்தந்த பொற்பரிசம் கழித்தோணியாற் கரைசேர்க்குங்து மலைத்தாரமுங் கடற்றாரமும் தலைப்பெய்து வருநர்க்கீயும்.”

முசிறித் துறைமுகத்தில் மரக்கலங்கள் பொன்னைக் கொணர்ந்து தந்துவிட்டு அதற்கீடாக மிளகை ஏற்றிச் சென்றன என்ற குறிப்பும் அகநானுாற்றில் காணப்படு கின்றன.

யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்.”

(3) கொற்கை

சிறுபாணாற்றுப் படையும், மதுரைக்காஞ்சியும்’ கொற்கைத் துறைமுகத்தே நடந்த முத்து வாணிகத்தினை வளமுறக் குறிப்பிடுகின்றன. முத்தால் மாட்சிமையுற்றது கொற்கை என அகநானுாறு நவிலும்.

மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கையம் பெருந்துறை முத்தின் அன்ன.”

இதுகாறும் கூறப்பெற்ற செய்திகள் எல்லாம் மேலை நாட்டார் எழுதிவைத்துள்ள குறிப்புக்களோடு ஒத்திருக்கக்

காணலாம்.

25. புறநானுாறு : 343 : 1-8 26. அகநானுாறு : 149 : 9-10 27 சிறுபாணாற்றுப்படை : 56-58 28. மதுரைக் காஞ்சி 135-138 29. அகநானுாறு : 27 : 8-9.