பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்தொகை காட்டும் மகளிர் கற்புநெறி 63.

நெஞ்சில் நிறைந்தவனே வாழ்விலும் நிறைகிறான் என்பதும் பெறப்படுகின்றன.

தலைவன் பிரிவால் கலங்கித் தவிக்கும் தலைவி, ‘இல்லத்திலுள்ள நீர் கலங்கியிருந்தால் அது இருக்கும் பாத்திரத்துள், சிறிது தேற்றாவின் விதையைத் தேய்த் ததும், அந்நீர் தெளிந்து விடுவது போல, மார்பழகு நிறைந்த மாண்பார் தலைவனைச் சேர்ந்ததும் தெளிவுற்று நலம் பெற்றுவிடுகிறாள்’ என்பதும் நெய்தற் கலிப்பாடல் ஒன்று கூறும் செய்தியாகும்.

கலம் சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து நலம்பெற்றாள் நல்லெழில் மார்பனைச் சார்ந்து.*

இவ்வாறாகக் கலித்தொகை முழுவதிலும் அக்கால மகளிர்தம் கற்பு நெறி கவினுறக் கிளத்தப் பட்டிருக்கக் காணலாம். ஒருமை மகளிரே போல உள்ள உறுதி கொண்டு விழுமிய வாழ்க்கை வாழ்ந்த அம் மகளிர்தம் கற்புநெறி போற்றற்குரியதாகும்.

28. கலித்தொகை நெய்தற்கலி: 25; 64-66.