பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இலக்கியக் காட்சிகள்


நாடகத் துறையில் ஈடுபட்டுத் தாமே மேடையேறி நடித்து ‘கூத்தாடிகள்’ என்று நாடகக் கலைஞர்கள் அழைக்கப்பட்ட இழிநிலையினைப் போக்கிச் சமுதாயத்தில் அவர்களுக்கு ஒர் உயர்ந்த தகுதியினைப் பெற்றுத் தந்தார். ஆங்கில நாட கங்கள் பலவற்றைத் தழுவித் தமிழில் நாடகங்கள் எழுதி யும், தாமாகவே பல நாடகங்களை எழுதியும் நாடகப் பேராசிரியராக விளங்கினார். இவர். இவ்விருவரும் இந் நூற்றாண்டில் நாடக இலக்கியமும் கலையும் வளர்த்த நல்லதமிழ்ச் சான்றோர்கள் ஆவர், இவர்கள் ஆற்றிய தொண்டின் வித்து முளைத்து, வளர்ந்து, ஆல்போல் தழைத்து, தமிழ் நாடகக் கலையாக நிறைந்தொளிர் கின்றது.