பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைனரும் தமிழ்நாடும் 75

வெறுத்தது. தமிழ்நாட்டில் அக்காலையில் வேள்வி செய் தலும், வேள்வியில் உயிர்ப்பலி வழங்கலும் ஆரியர் கூட்டுறவால் நிலவிவந்தன. சமணர்கள் இதனைப் பலமாக எதிர்த்தனர். மேலும் பிறவுயிர்கட்குத் துன்பம் இழைக்கக் கூடாது என்றும், எவ்வுயிர் க்கும் அருள் காட்ட வேண்டும் என்றும், கொல்லாமையை நோன்பாகக் சொள்ள வேண்டும் என்றும், புலால் உண்ணுதல் எவ்வாற்றானும் போற்றப்பட வேண்டாத தீய பழக்கம் என்றும் சமணர்கள் போதித்தனர். இக் கொள்கைகள் எல்லாம் தமிழர்க்கு உவப்பாயமைந்தன.

மேலும் சமண முனிவர்கள் தீயன பயக்கும் பொய் யினைப் பேசக்கூடாது என்றும், பிறர் பொருளைக் கன விலும் கருதலாகாது என்றும் பிறப்பிற்குப் பெருங் காரணமாக இருக்கும் அவாவினை அகற்ற வேண்டும் என்றும், மகளிர் மோகத்தை விழையாமை வேண்டும் என்றும், பிறரைப் பழித்தலும் பிறர் மாட்டுச் சினங் கொள்ளுதலும், கடுஞ்சொல் கூறுதலும் கடியப்பட வேண்டும் என்றும், நாவடக்கத்தினை நனபோற்றி மேற் கொள்ளவேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர்.

இவ்வாறு நல்வாழ்விற்குரிய நல்ல பல கொள்கை களைச் சமண சமயம் கொண்டிருந்ததனால் தமிழ் நாட்டில் வாழ்ந்த தமிழர்களுக்கு இக்கொள்கைகளில் பிடிப்பும் பிணைப்பும் ஏற்பட்டன. மற்றொரு சிறப்பியல் பினையும் சமண சமயத்தாரிடம் காணலாம். எந்தெந்த நாட்டில் அவர்கள் புகுந்து கலந்து வாழ்ந்தார்களோ அவ்வந்நாட்டில் தங்கள் சமயக் கருத்துகளைப் பரப்பு வதற்கு அவ்வந்நாட் டில் வழங்கிய மொழிகளையே கையாண்டனர். தமிழ்நாட்டிற் போந்த சமணர்கள் தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டதோடு அமையாது அம் மொழியினை வாழ்வித்து வளப்படுத்தவும் முனைந்தனர். முதற்கண் சமயப் பிரசார நோக்கத்திற்காகத் தமிழ்