பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைனரும் தமிழ்நாடும் 79

பிழைப்பிலாட் புறங்தானும்

குரைவரப் பேணல்செய்யாது

இழுக்கினா ரிவர்கள் கண்டாய்

இடும்பை நோய்க் கிரைகளாவார்.

(சீவகசிந்தாமணி 252)

நட்பிடைக் குய்யம்வைத்தான்

பிறர்மனை நலத்தைச் சேர்ந்தான் கட்டழல் காமத்தீயின்

கன்னியைக் கலக்கினானும் அட்டுயி ருடலம் தின்றான்

அமைச்சனா யரசுகொன்றான் குட்ட நோய் நரகம் தம்முட்

குளிப்பவ ரிவர்கள் கண்டாய்.

(சீவகசிந்தாமணி 253)

திருத்தக்கதேவர் எழுதிய பிறிதொரு நூலாம் நரிவிருத்தம் யாக்கை நிலையாமை, உலக நிலையாமை யினை விளக்குவதாகும். தோலாமொழித்தேவர் இயற்றிய சமண புராண வழி நூலாகிய சூளாமணி, சுரமை நாட்டைப் போதநமா நகரத்திலிருந்து ஆட்சிபுரிந்த பயாபதி என்னும் அரசன் நிலையாமையுணர்ந்து தன் ஆட்சியினை தன் மைந்தன் கையில் ஒப்படைத்துவிட்டுத் தன் தேவியுடன் நிர்வாணமுத்தி எய்திய வரலாற்றைக் கூறுவதாகும். உதயண குமார காவியம் சிறுகாப்பிய வகையில் சேர்ந்த சமண நூலாகும், மேரு மந்திர புராண மும் இவ்வாறே சமண சமயக் கொள்கைகளை விளக்கி நிற்கும் நூலாகும். ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமணர் சார்புடைய நூல்களே. m

பெருங்கதை, பைசாச மொழியிற் குணாட்டியர் என்பவரால் இயற்றப்பட்ட பிருகத் கதை. வடமொழியில்