பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைனரும் தமிழ்நாடும் 8 I

அந்நாளில் இக்காலத்துப் பேரகராதிகளின் தொண் டினைச் செய்து கல்விப் பயிர் வளர உரமூட்டின.

இவ்வாறு காப்பியம், சிறுகாப்பியம், சமய நூல்கள், நீதி நூல்கள், தனி நூல்கள், இலக்கணம், நிகண்டு முதலான பல்வேறு துறைகளிலும் பாங்குற நிலைத்த தொண்டாற்றியவர்கள் சைனர்கள் என்பது இக் கட்டுரை

யான் இனிது விளங்கும்.

தேவார காலத்தில் சமணர் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பது தெளிவு. தேவாரப் பதிகங்களில் சமணர் ஒழுக்கம், செயல், நிலை குறித்த பல செய்திகளைக் காணலாம். அக்கால ஆட்சியாளரிடை இவர்கள் பெற் றிருந்த அரசியல் செல்வாக்கு பின்னாளில் சிதைந்தது. இதற்குத் தோற்றுவாய் செய்தவர் திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தருமாவர். திருநாவுக்கரசர் மகேந்திரவர்ம பல்லவனைச் சமணசமயத்திலிருந்து சைவசமயத்திற்குத் திரும்பக் கொணர்ந்தார். அவன் சமணப் பாழிகளையும் கோட்டங்களையும் இடித்து அவ்விடங்களில் திருக்கோயில் களை எடுப்பித்தான். மங்கையர்க்கரசியார், குலச்சிறை யார் வேண்டுகோட்படி பாண்டிய நாடு சென்று திருஞான சம்பந்தர் சமண முனிவர்களுடன் அனல்வாதம், புனல் வாதம் நிகழ்த்தி வெற்றிபெற்றுச் சமணர் பலரைக் கழு வேற்றினர் என்ப. கூன்.பாண்டியன் எனப்படும் நின்றசீர் நெடுமாறனும் அமண் சமயத் தொடக்கொழிந்து, சைவ சமயத்திற்குத் திரும்பினான் என வரலாறு கூறும். இவற் றாலெல்லாம் இடைக்காலத்தில் சைனர்களின் அரசியல் செல்வாக்கு பாதிக்கப்பட்டாலும், அவர்களின் மொழித் தொண்டும், சமுதாயத்தொண்டும் தடைபடாது நிகழ்ந்து வந்தன. எனவேதான், தேவார காலத்திற்குப் பின்னர்ச் சைனர்களால் எழுதப்பட்ட பல்துறை நூல்களையும் காண்கிறோம். மேலும் அவர்கள் சோழ பாண்டியப் பெரு

இ. கா.-6