பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

இலக்கியக் காட்சிகள்


எத்துணை மதிப்பினையும் சிறப்பினையும் தமிழர் பால் கொண்டு பாராட்டுவர் என்பதனை உன்னுதல் வேண்டும். கணியன் பூங்குன்றனார் புறநானுாற்றுப் பாடல் ஒன்றிற் குறிப்பிட்டுள்ள இவ்வுலகந் தழுவும் உயர்நோக்கு, தமிழர் தம் தனிநோக்காக இருந்தது என்பது புலனாகக் காண συπιο.

கண்ணனிடம் பேரன்பு கொண்ட பாரதியார் காணு மிடம் எல்லாம், பார்க்கும் பொருளெல்லாம் கண்ண னாகவே கண்டார். உண்ணுஞ் சோறும் பருகு நீரும் தி ன்னும் வெற்றிலையும் எங்கும் எம் கண்ணன்’ என்று ஆழ்வார்கள் கண்டதுபோலவே, பாரதியாரும் காககைச் சிறகின் கரிய நிறத்தினிலும், பார்க்கும் மரங்களின் பச்சை நிறத்தினிலும், தீக்குள் விரலை வைத்தால் கிடைக்கும் தீண்டும் இன்பத்தினிலும் கண்ணனையே கண்டார். அதே பாரதியார்,

காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் நோக்குங் திசையெல்லாம் காமின்றி வேறில்லை நோக்க நோக்கக் களியாட்டம்

என்று கண்ணாற் கானும் உலகனைத்தையும் தம்மனைய உயிர்ப் பொருள்கள் வாழும் இடமாகவே கொண்டார். அஃறிணை யுயிர்களையும் தம்முயிர்போல் எண்ணி ஒத் துரிமை தரும் உள்ளம் தமிழுள்ளமாகும்.

திருமுருகாற்றுப்படை,

உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு

என்றே தொடங்குகின்றது. உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்பர் அறிஞர். உலக மக்கள் உவப்பவே கீழ்