பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழரின் உலக நோக்கு 87

வாழ்க அந்தணர்; வானவர்; ஆனினம்; வீழ்க தண்புனல்; வேந்தனும் ஓங்குக; ஆழ்க தீயதெல்லாம்; அரன் நாமமே சூழ்க, வையகமும் துயர் தீர்கவே!

பிற்காலத்துத் தாயுமான தயாபரரும்,

எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே

என்று உலக உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ வேண்டும் என்று அவாவுகின்றார்; ஆண்டவனிடம் கசிந்துருகி இரங்கி நிற்கின்றார். மேலும் அவர், காகம் தான் கண்ட உணவை மற்றக் காகங்களோடு உறவு கொண்டாடி ஒன்றுகூடி உண்பதுபோல் உடம்பு மறை வதற்குமுன் பேரின்ப வெள்ளமாய்ப் பொங்கித் ததும்பும் பூரண மாம் இறையருளை எய்து தற்கு உலகரனைவரையும் உரத்த குரலில் தன்னோடு கலந்துகொள்ள அழைக் கின்றார்.

காகமுறவு கலந்துண்ணக் கண்டீர்; அகண்டா காரசிவ

போகமெனும் பேரின்பவெள்ளம் பொங்கித் ததும்பிப்

(பூரணமாய்

ஏகவுருவாய்க் கிடக்குதையோ! இன்புற்றிட நா மிணி_

(எடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேரவாரும் செகத்தீரே.

தே மனநிலையில் பாரதியாரும்,

வயிற்றுக்குச் சோறிடவேண்டும்-இங்கு வாழும் மனிதருக் கெல்லாம் பயிற்றிப் பல கல்வி தந்தே-இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்

என்று உலகில் வாழும் மக்கள் அனைவரும் பசியற்று வாழ்ந்து, கல்வி கற்கும் வசதி பெற்று, அதனால் உலகை