பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

55



அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதற்றே உலகு.

தெள்ளு தமிழ் வள்ளுவரின் தேனினுமினிய குறள்பாக்களில், தொடக்கக் குறள் இது.

உயிர் எழுத்து வில் தொடங்கி மெய்யெழுத்து - ன்-இல் முடிகின்றன 1330 குறள்களும் என்று, அவரின் அறிவுத் தெளிவை வானளாவப் புகழ்வார்கள் வண்டமிழ் சான்றோர்கள்.

இந்த முதல் குறளே, முத்தாய்ப்பாக விளங்குகிறது.

இந்தக் குறளுக்குப் பொருள் கூறுபவர் எல்லோரும், "எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய முதலை உடையன. அதுபோல ஆதிபகவனாகிய முதலை இந்த உலகம் உடைத்து" என்பர்.

இன்னும் சிலர், எண்ணத்திற்கே ஏற்காத கதை ஒன்றைக் கூறுவர்.

'ஆதி என்ற தாழ்ந்த பெண்ணுக்கும், பகவன் என்ற பார்ப்பன முனிவருக்கும் தோன்றிய குழந்தை திருவள்ளுவர் என்று கூறி, உலகுக்குத் தாய்தந்தையான ஆதிபகவனே முதலாக இருக்கிறார்கள் என்பதாகக் கதைப்பர்.

இந்தக் குறளுக்கும் நம் துறைக்கும் என்ன தொடர்பு என்பது தான் புதியது. புதிரானது.