பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அகத்தியர் கோயில்களும் கி. பி. எட்டாம் நூற்றாண்டில் சிறப்புற்றிருந்தன என்பதும், அவற்றை அந்நாட்டு வேந்தர்கள் பெரிதும் போற்றி வந்தனர் என்பதும் கல் வெட்டுக்களால் நன்கு வெளியாகின்றன. கி. பி. 889-ல் காம்போச நாட்டில் வரையப்பெற்ற கல்வெட்டொன்று, அந்நாட்டு மன்னர்களின் முன்னோருள் அகத்தியர் ஒருவர் என்றும் இவர் காம்போசமன்னனுடைய மகள் யசோமதியை மணந்தனர் என்றும் இவ்விருவர்க்கும் பிறந்த புதல்வனே நரேந்திரவர்மன் என்ற அரச குமாரன் என்றும் கூறுகின்றன. அந்நாட்டிலுள்ள மற்றொரு கல்வெட்டு அந்நாட்டைப் பலவகையாலும், சீர் திருத்தி உயர் நிலைக்குக் கொணர்த்தவர் அகத்தியரே என்றும் இவர் அங்கு இரண்டு சிவன் கோயில்கள் கட்டுவித்தார் என்றும் இவர் தம் மாணாக்கரை அந்நாட்டிற்குக் குருவாக அமர்த்திவிட்டு அதனை விட்டுப் புறப்பட்டார் என்றும் உணர்த்துகின்றது. இங்ஙனமே இந்துசீனம், மலேயா என்ற நாடுகளிலும் ஆகத்தியர் சிவவழிபாட்டை ஏற்படுத்தியதோடு அத் 'நாடுகளே நாகரிக நிலையில் அமையச் செய்தனர் என்றும் தெரிகிறது. எனவே, பாண்டி நாட்டிலிருந்து புறப்பட்டுக் கடலைக் கடந்து கிழக்கே சென்று ஜாவா, காம்போசம்' இந்துசீனம், மலேயா ஆகிய நாடுகளில் தங்கிப் பல சீர் திருத்தங்கள் செய்து, அந்நாடுகளை உயர் நிலைக்குக் கொணர்ந்தவர் அகத்தியரே என்பது அந்நாடுகளில் கிடைக்கும் பல ஆதாரங்களால் தெளிவாகப் புலப்படு கின்றது. காம்போச நாட்டுக் கல்வெட்டொன்று அகத்தி யரைக் கடலை வென்றவர் என்று கூறுவதற்குக் காரணம் இவர் கடக்கமுடியாத கடலைக் கடந்து கீழ் நாடுகட்குச் சென்றமையே என்பது அறியற்பாலது.