பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அவற்றை நோக்கின் அந்நாளில் கோயில்களில் மக்களால் வழிபடப் பெற்ற தெய்வங்கள் எவை என்பது எளிதில் புலப்படும். சோழரது தலை நகராகிய காவிரிப்பூம்பட்டி னத்தில் தம்காலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி விருத்த தெய்வங்களை ஆசிரியர் இளங்கோவடிகள் தாம் இயற்றியுள்ள சிலப்பதிகாரத்தில் கூறியுள்ளார். அதனை, "பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீல மேனி நெடியோன் கோயிலும் மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ நான்மறை மரபிற் றீமுறை யொருபால் நால்வகைத் தேவகு மூவாறு கணங்களும் பால் வகை தெரிந்த பகுதித் தோற்றத்து வேறுவேறு கடவுளர் சாறுசிறத் தொருபால் அறவோர் பள்ளியு மறனேம் படையும் புற நிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும் துறவோ ருரைக்குஞ் செயல்சிறந் தொருபால்' என்னும் இந்திரவிழவூரெடுத்த காதைப் பகுதியினால் உணரலாம். இங்கனமே, பாண்டியாது தலை நகராகிய மதுரையம்பதியில் அந்நாளிலிருந்த கோயில்கள், 'துதல் விழி நாட்டத் திறையோன் கோயிலும் உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும் மேழி வலனுயர்த்த வெள்ளை நகரமும் கோழிச்சேவல் கொடியோன் கோட்டமும் என்று அவ்வடிகளால் குறிக்கப் பெற்றிருத்தல் அறியற் பாலது. ஆகவே, கடைச்சங்க நாளில் காவிரிப்பூம்பட்டினம்,