பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருத்தியும் மகனும் 137 என்னை அப்படியே தழுவிக்கொண்டு, என் க ண் ண த் துடைத்தார்கள். அவர்கள் முகத்தை நோக்கினேன்.இன்னும் தெளிவு பெறவில்லை. கண்கள் நீரை உகுத்துக்கொண்டே இருந்தன. விம்மலுக்கு இடையில் ஏனம்மா?' என்று கேட் டேன். அவர்கள் ஒரு பெருமூச்சுடன் நீண்ட கண்ணிரையும் நிலத்து உதிர்த்துப் பேசினர்கள். குழந்தாய் நீ படித்த பாட்டைப்பற்றி நினைத்தாயா? அது நம் வாழ்வைப் போன்று அல்லவா இருக்கிறது. இக் கதையை முன்னே புராணிகர் மூ ல ம் கேட்டிருக்கிறேன். ஆலுைம் இந்தப் பாட்டை நான் கேட்டதில்லையே; குழந்தாய்! உன்னையும் என்னையும் அப்படியே ஒன்ருக அல்லவா இந்தப் பாட்டில் பிணைத்து வைத்திருக்கிறது. என்ன படித்தாய்? மறுபடியும் படி என்ருர்கள். நானும் ஒருத்திநான் ஒருத்திக்கு இந்த ஒருமகன் இவனும் தேரும் கருத்திலாச் சிறியன் வேறு கணகனும் காணேன் ஜய' என்று படித்தேன். அம்மா என் வாயைப் பொத்தி விட்டு அலறியே அழுதுவிட்டார்கள். பி ற கு மெள்ளத் தெளிந்து. குழந்தாய், இன்று நாம் வாழும் வாழ்க்கையை அல்லவா இந்த இரண்டு அடிகளும் காட்டுகின்றன. நான் ஒருத்தியாக இதோ வாழ்கின்றேன். எனக்கு நீ ஒருவனே தான் மகன். உனக்கு உடன் பிறந்த ஆணுே, பெண்ணுே இல்லையே, நீயும் நல்லது கெட்டது அறியாத சிறுவனுக அல்லவா இருக்கிருய். மேலும் நமக்குத்தான் வேறு யார் சுற்றத்தார் இருக்கிருர்கள்? பாவம் ஒன்றுக்கும் பற்ருத பாட்டி எங்கோ மூலையில் முடங்கிக் கிடக்கிருள். நாம் இன்று துன்புற்ருல் வேண்டாம் என்று அழும் கண்ணிரைத் துடைப் பார் யார் இருக்கிருர்கள்? அன்று அந்த மதுரைப் பெண் சொக்கநாதரிடம் அழுதது போல, நான் அன்ருடம் இந்த