பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 இளமையின் நினைவுகள் வாறு செய்ய முடியவில்லை. அவர் அந்தத் திருநீற்றை எங்களிடம் கொடுத்தார். நாங்கள் வாங்கி நெற்றி யி ல் அணிந்துகொண்டோம். தலைநிமிர்ந்தோம். மறுகையைக் காட்டி மூடினர். பிறகு திறந்தார்; அதில் குங்குமம் இருந் தது. எங்கள் பயம் அதிகரித்தது. உண்மையிலேயே அவர் கடவுள் அவதாரம் என்றே முடிவுக்கு வந்துவிட் டோம். என்ருலும் அடுத்து அவர் கேட்டது எங்கள் உள் ளத்தில் ஒரு மாற்றத்தை உண்டாக்கிவிட்டது என்னலாம். அவர் குங்குமத்தைக் கொடுத்தார். அதையும் வாங்கி இட் டுக்கொண்டோம். பிள்ளைகளே நீங்கள் என்ன நினைக்கி lர்கள்?' என்று கேட்டார் அவர், நாங்கள் நினைப்பது என்ன ! அவரைத் தானே வந்து நம்மை ஆட்கொள்ளும் கடவுளாக அல்லவா நாங்கள் நினைத்தோம். நினைத்ததை அப்படியே அவரிடமும் சொல்லிவிட்டோம். ஆம்! என் நண்பனும் என்னைப் போலவே எண்ணி ன்ை. அவர் அதுதான் சமயமென்று தன் மூட்டையை அவிழ்க்கத் தொடங்கினர். துணி மூட்டையை அல்ல; சொரூப மூட்டையை. ஆம் குழந்தைகளே ! உங்கள் துன்பத்தை அறிந்து ஆண்டவனே என்னை இங்கு அனுப்பி உங்களுக்கு இந்தத் திருநீற்றையும், குங்குமத்தையும் கொடுக்கச் சொன்னர். இதை நீங்கள் அணிந்து கொண்ட மையால் உங்களுக்கு எல்லாக் குறைகளும் இனி இல்லை யாகும்'என்ருர், நைந்து நைந்து வாடி வாழும் என் உள்ளத் துக்கு அவர் சொன்ன சொற்கள் நன்கு ஆறுதல் தருவது போன்றே இருந்தன. துன்ப எல்லையில் நின்று எதோ அமைந்து வாழும் நான் அதை வேறு எப்படி எடுத்துக் கொள்வேன்? பல புராணங்களில் வருந்தி நைந்து வழிபடுபவருக்கு ஆண்டவன் இந்த வகையில் அருள் புரிந்த தாக நான் பல கதைகள் படித்திருக்கிறேன். நெடுங்