உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முக்குத்தி 151 ஒரு பெரும் உத்திராட்சமும் அழகாக அமைக்கப்பட்டி ருந்தது. இரவு எட்டு மணிக்கு அந்த உத்திராட்சம் வீழ்ந்து விட்டதை அன்னையார் அறிந்தார்கள். அந்த வேளையில் அதை எங்கு சென்று தேடுவது? நான் வீட்டில் தான் இருந்தேன். என்ருலும் நன்கு இருட்டிய இரவில் எங்கு சென்று தே டு வது ? விடியற்காலையில் எழுந்து அவர்கள் குளித்த அந்த ஊற்று நீரில் சென்று தேடுமாறு கூறினர்கள். வேறு எங்கே வீழ்ந்திருந்தாலும் அது வீழ்ந்த ஒலி கேட்டிருக்கும் எ ன் று ம், அவ்வாறு கேளாமையின் குளிக்கும் காலத்தில் ஊற்று நீரில்தான் வீழ்ந்திருக்கும் என்றும், ஆயினும் தான் குளித்த பிறகு மாலை ஐந்து மணிக்கு மேல்-எத்தனையோ பேர் வந்து மூழ்கிச் சென்றிருப் பார்கள் என்றும், அது யாரிடத்தில் கிடைத்ததோ-பெற்ற வர்கள் கொடுப்பார்களோ, கொடார்களோ என்றும், இறுதி யாக நம்முடையதானுல் எப்படியும் கிடைக்கும். விடியற்காலை சென்று தேடிப்பார் என்றும் கூறினர்கள். நானும் சரி என்று படுத்துக்கொண்டேன். மறுநாள் நன்கு புலருவதன் முன்பே என்னை அன்னை யார் எழுப்பி விட்டார்கள். நேராக அவர்கள் குளித்ததாகக் கூறிய ஊற்றுத் துறைக்குச் சென்றேன். நன்ருகப் புலராத முன் பொழுதாதலின்-இருட்டில் மணலில் ஒன்றும் தெரிய வில்லை. சிறிது நேரம் உட்கார்ந்திருந்தேன்; ந ன் கு விடிந்தது. நான் எழுந்து அந்த ஊ ற் றி ல் துவைக்கும் கல்லின் பக்கத்தில் உட்கார்ந்து குளிக்கத் தோண்டிய பள்ளத்தின் அருகில் சென்றேன். யாரும் தண்ணிரைக் கலக்கவில்லை. கலக்கிலுைம் அந்தத் தெளிநீர் கலங்காது. அத் தெள்ளிய நீரில் சுமார் ஒன்றரை அடி ஆழமுள்ள அந்தப் பள்ளத்தின் மத்தியில் அடியில் மின்னிக்கொண்டு அந்த உருத்திராக்கம் காட்சி தந்தது. என் மகிழ்ச்சியை யாரே