பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 . இளமையின் நினைவுகள் கப்பட்டேன். என்ருலும் ஊரில் என்னை எல்லோரும் சிவா னந்தம் என்றே கூப்பிடுவார்கள். 'சிவானந்தம் வாடா என்று கூப்பிட்டார் அந்தப் பெரியவர். எனக்கு அவரிடம் எப்போதுமே ஒரு அச்சம் உண்டு. என்? ஊரில் எல்லாரிடமுமே நான் பயந்து நடந்து வந்தேன். மெள்ள அருகில் சென்றேன். கைஅசைவற்றுநின் றது. இப்போதுஎன்ன செய்துகொண்டு போய்ை?' என்ருர் அவர். ‘நான் ஒன்றும் செய்யவில்லையே, அதோ பசுமாடுகள் போகின்றன. அவற்றை ஒட்டிக்கொண்டு ஆற்றுக்குப் போகிறேன் நான்' என்றேன். அதுசரி. கையை ஏன் அப்படி மடித்து இவ்வாறு அடித்துக் கொண்டு போகிருய் பயித்தியம்போல' என்ருர். நான் 'சும்மா என்று வாய்மூடி நின்றேன். அவர் என்னடா சும்மா ! எல்லாரும் பெரிய மத்தளக்காரர் ஆகிவிடலாம் என்ற யோசனை யோ! முட்டாள். மத்தளம் அடிப்பதென்ருல் உன் போன்ற முட்டாள்களுக்கு அவ்வளவு சுலபம் அல்ல; தெரிஞ்சுதா ! எங்கள் பையன் கற்றுக்கொள்ளுகிருன் என்ருல் அதைப் பார்த்து நீயும் கைதட்டுகிருயே; புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொள்வது போல அல்லவா இருக்கிறது. போ ! இனிமேல் அந்த மாதிரியெல்லாம் கைதட்டி கால்தட்டி நின்ருல் உதைப்பேன்’ என அதட்டி ஆணையிட்டார். நான் உண்மையிலேயே பயந்துபோய்விட்டேன். ஊ ரு க் கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்றபடி, நான் பேசாமல் வாய்மூடிக் கிடந்தாலும், மேலே கேட்க யாரும் ஆண் துணை இல்லாததாலும், எல்லாரும் அடித்து உதைப்ப தாகவே பேசுவார்கள். நான் எல்லாவற்றையும் கேட்டு வாய்மூடிக்கொண்டு போய்விடுவேன். என்ருலும் எங்கள் அம்மா காதில் இவை எல்லால் விழுந்தால் அவர் பொறுக்க மாட்டார். உடனே அவர்களோடு சண்டையிட்டு, அவர்கள்