பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 இளமையின் நினைவுகள் டிருந்தார்கள். பெரியம்மா என்னை வாடா கண்ணே! என்று கூப்பிட்டார்கள். நான் பயந்து ஒடத்தொடங்கினேன். அந்தப் பாட்டி என்னை நிறுத்தி அப்பா பயப்படாதே. உன் பெரியம்மா உன்னிடம் எவ்வளவு அன்பாய் இருக் கிருர்கள். வா! உன்னைக் கட்டித்தழுவி முத்தமிட ஆசையாய்க் கூப்பிடுகிருர்களே' என்ருள். நான் மெதுவாக ‘அம்மா என்றேன். எல்லாம் அம்மாவுக்குத் தெரியாது; வா' என்று கையைப் பிடித்து இழுத்தார்கள். பெரியம்மா எ ன் னை க் கட்டித்தழுவி முத்தமிட்டார்கள்; கண்ணிர் விட்டார்கள். 'பாவி, குழந்தையைக்கூட வரவேண்டாம் என்கிருளே’ என்ருர்கள். உண்மையில் அவர்கள் அழுவதைக் கண்டு அம்மா செய்தது தவருே என்று கூட அன்று அந்த இளம் உள்ளம் எண்ணிற்று. எனினும் அதை எல்லாம் எண்ணி நிற்க நேரமில்லை. நான் வாய் திறந்து ஒன்றும் பேசவும் இல்லை. பெரியம்மா என் கையில் ஒரு சிறிய பொட்டலம் ஒன்றைக் கொடுத்தார்கள். நான் வாங்க மறுத்தேன். 'மிட்டாய் என்றும் 'பள்ளிக்கூடம் சென்றதும் தின் என்றும் சொன்னர்கள். நான் அதைப் பத்திரமாக துணியில் முடிந்து கொண்டு ஒடினேன். வீட்டில் பகல் உணவு .ெ கா ன் டு மறுபடியும் பள்ளிக்கூடம் புறப்பட்டுவிட்டேன், பள்ளிக்கூடத்தில் பெரியம்மா கொடுத்த பொட்டலத் தைப் பிரித்துப் பார்த்தேன். சில மிட்டாய்கள் இருந்தன. தினறேன்; பக்கத்தில் உள்ள பிள்ளைகளுக்கும் கொடுத் தேன். ஆல்ை அவ்வாறு கொடுத்ததால் பின்னல் பெருந் துன்பம் வரும் என்று தெரிந்திருந்தால் த னி யாக ஒரு மரத்தடியில் அத்தனையும் தின்றுவிட்டு வந்திருப்பேன். எங்கள் தெரு நண்பர் சிலருக்கும் மிட்டாய் கொடுத்தேன். மிட்டாய் இனிப்பாய் இருந்தது. ஆனல் அள்று மாலை...... எங்கள் தெரு நண்பன் ஒருவன் நேராக என் வீட்டிற்குச்