பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழாவும் வேட்டியும் 93 என நினைக்கிறவர்கள்; அவ்வளவுதான். அது மற்றவர் களுக்கு வேறுவிதமாகப்பட்டது. ஊரில் உள்ளவர்கள் வாழவும் பொறுக்கமாட்டார்கள், கெட்டாலும் தாங்கமாட் டார்கள் என்று பலரும் பேசிக்கொள்ளுகின்ற ஒரு பேச்சு பற்றி அன்றே அம்மா அடிக்கடி சொல்லுவார்கள். அன்றுமுதல் நான் உயர்ந்த ஆடை அணிகளை உடுப் பதை விரும்பவில்லை, இறைவன் திருமுன்பு என் நண்பர் எனக்குக் காட்டிய பாடம் இன்றுவரை மனத்தில் நிலை பெற்றுவிட்டது. கூடியவரையில் எளிய வாழ்வையே மேற் கொள்ளவேண்டும் என நினைத்தேன். என்ருலும் எனது தாயார் சொற்படி நடக்கவேண்டி இருந்தமையால் நான் எட்டாவது வகுப்பு வாலாஜாபாத்தில் படிக்கும் வரையில் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நகைகளையும் பட்டாடை களையும் அணிந்துகொண்டேன். பிறகு அன்றுதொட்டு இன்றுவரை பட்டாடைகளையும் படாடோப வாழ்வையும் விரும்பாது கூடியவரை எளிய வாழ்விலே வாழ்ந்து வருவ தாக எண்ணியே என்நாட்களைக் கழிக்கின்றேன். மக்கள் வாழ்வில் திருப்புமையங்கள் எத்தனையோ உண்டாகின்றன. என் வாழ்வின் திருப்புமையங்களுள் அது ஒன்று என்று அன்றைக்கு என்னல் எண்ண முடியாவிட்டாலும், அறி வறிந்த பிறகு நான் அவ்வாறுதான் எண்ணி அமைந்தேன் என்பது உண்மை.