பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12

களில் தஞ்சமடைந்தனர். ஐ.நா. சபை பலஸ்தீனை அரபுப் பகுதி, இஸ்ரேல் (யூத) பகுதி என இரு நாடுகளாகப் பகுத்து தீர்மானம் நிறைவேற்றியது. இஸ்ரேல் அவ்வப்போது திடீர் படை யெடுப்புகள் மூலம் பலஸ்தீனத்தின் பெரும்பகுதியைக் கைப்பற்றிக் கொண் டுள்ளது.

அன்று முதல் இன்று வரை இரு பகுதி களுக்குமிடையே சச்சரவு இருந்து வரு கிறது. யாஸிர் அரஃபாத் தலைமை யில் பலஸ்தீன விடுதலை இயக்கம் பலஸ்தீன் நாட்டை யூதர்களிடமிருந்து மீட்கத் தொடர்ந்து போராடி வரு கிறது.

இன்றைய இஸ்ரேல் நாடு 20, 770

கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. மக்கள் தொகை சுமார் நாலரை இலட்சமாகும்.

பாகிஸ்தான்: 1947ஆம் ஆண்டு

இந்தியா விடுதலை பெற்றபோது உரு வான நாடு பாகிஸ்தான். தொடக்கத் தில் பாகிஸ்தான் நாடு மேற்குப் பாகிஸ் தான், கிழக்குப் பாகிஸ்தான் என இரு பகுதிகளாக அமைந்திருந்தது. 1971 இல் மொழிப்பிரச்சினை காரணமாக முஜீபுர் ரஹ்மான் தலைமையில் கிழக் குப் பாகிஸ்தான் பிரிந்து தனி நாடாகி யது. அதுவே இன்றைய பங்களாதேஷ் நாடு. இன்று பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் முழு நாடு பழைய மேற்குப் பாகிஸ்தான் மட்டுமே.

இன்றைய பாகிஸ்தான் கிழக்கே இந்தியாவையும், மேற்கே ஈரானையும், வடக்கே சீனாவையும், தெற்கே அரபிக் கடலையும் எல்லைகளாகக் கொண்டு அமைந்துள்ளது. வடமேற்கே அமைந் துள்ள அஃப்கானிஸ்தான் மற்றொரு முக்கிய அண்டை நாடாகும். பாகிஸ்

தானின் .ெ மா. த் த ப் பரப்பளவு

பாத்திமா

8,03,943 ச.கி.மீ. ஆகும். மக்கள் தொகை சுமார் ஒன்பது கோடியாகும். பஞ்சாப், சிந்து, வடமேற்கு எல்லைப் புற மாகாணம், பலுச்சிஸ்தானம் ஆகிய நான்கு ம .ா நி ல ங் க ைள க் கொண்ட கூட்டமைப்பாகும் பாகிஸ் தான்.

பாகிஸ்தானுக்கு நீர்வளம் தருவது சிந்துநதியும், அதன் கிளை நதிகளான சீலம், சீனாப், ரவி, சட்லெஜ் ஆகிய ஆறுகளாகும். பாகிஸ்தான் ஒரு மித வெப்ப நாடாகும்.

பாகிஸ்தானில் சிந்து, பலுச்சி, பஞ் சாபி மொழிகள் பேசப்பட்டாலும் தேசிய மொழியாக உருதும் ஆங்கில மும் உள்ளன. இங்குள்ள மக்களில் 97

பேர்

சதவிகிதம் முஸ்லிம்களாவர்.

தலைநகரம் இஸ்லாமாபாத் ஆகும்.

பாகிஸ்தான் ஒரு இஸ்லாமியக் குடி யரசு ஆகும்.

பாத்திமா (ரலி). பெண் குலத்தின் பெருமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த பாத்திமா (ரலி) பெருமானார் (ஸல்) அவர்களின் திருமகளாவார். அண்ணல் நபி (ஸல்) அவர்கட்குப் புதல்வியர் நால்வர். அவர்களுள் பாத்திமா (ரலி) தந்தையோடு மிக நெருக்கமுடையோ ராக விளங்கியவர்: நபிகள் நாயகத்தின் மறைவுவரை அவர்தம் நிழல்போல் இருந்தவர்.

நபிகள் திலகம் (ஸல்) அவர்கள் நபித் துவம் பெறுவதற்கு ஐந்து ஆண்டுகட்கு முன்பு, ரமலான் 20இல் பிறந்தவர் பாத்திமா (ரலி). நபித்துவம் பெற்ற பின் குறைஷியரிடையே இஸ்லாமியப் பிரச்சாரம் செய்தார் பெருமானார் (ஸல்) அவர்கள். அப்போது சிலை

வணக்கக் குறைஷியர் பெருமானார் அவர்கட்குப் பெருந்துன்பம் தந்து வந்தனர். அவற்றையெல்லாம் சிறுமி