பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 74

ஹாதி காலமானவுடன் இவர் ஆட்சிப் பொறுப்பேற்றார்.

இவரது ஆட்சிக் காலத்தில் நாட்டில் வளம் பொங்கியது. சூபிட்சமும் அமைதி யும் கைகோத்து நின்றன. பல்துறை அறிஞர்களையும் கலை வல்லுநர்களை யும் உள்ளடக்கிய தலைநகரம் பக்தாது. உலகின் ஒப்பற்ற நகராக உலகில் சிறப் புற்று விளங்கியது. இந்நகரை அடித்தள மாகக் கொண்டு பல்வேறு அரபு நாட் டுக் கதைகள் உருவாகி பக்தாதின் பெருமையையும் ஹாருனுர் ரஷீத் ஆட்சிச் சிறப்பையும் பறைசாற்றின.

அக்காலத்தில் வலுவான பேரரசர் களாக விளங்கிய ஃபிரான்ஸின் சார்லி மென், சீனப்பேரரசர் ரோமானியப் பேரரசி ஐரீன் போன்றோர். இவரது நட்பை நாடினர். அரிய பொருள்கள் பலவற்றை அன்பளிப்பாக தங்கள் நட்பை வலுப்படுத்திக் கொண் டனர். இவரோடு நட்பு கொண்டிருப்

வழங்கித்

பதைப் பெருமையாகக் கருதி மகிழ்ந்

дѣ sат т.

ரோமானியப் பேரரசி ஐரீனுக்குப் பின் ஆட்சிபீடமேறிய நிலிைஃபோரஸ் ஹாருனுர் ர வி தி ட ம் கொண்டு போருக்கெழுந்தான். அவன் படை நடத்தி ஹெராக்லியா, டியானா போன்ற பல பகுதிகளைக் கைப்பற்றி னார். தோல்வியடைந்த நிலிஃபோரஸ்

மாறுபாடு

கப்பம் கட்டி வரலானான். இதன்பின்

- 3 o' х ४ இவரிடம் போரிட யாருமே முன் வர வில்லை.

இவர் மிகச்சிறந்த போர்வீரர். அதே சமயம் மிக உயர்ந்த நல்லியல்புகளும் மார்க்கப் பேணுதலும் உள்ளவராக விளங்கினார். பலமுறை ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளார். சி ற ந் த தொழுகையாளியாக இருந்தார்.

அமைதியான இவர் ஆட்சி அறிவு வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கியது.

ஹிஜ்ரத்

கிரேக்க மொழியில் அக்காலத்தில் புகழ்

பெற்று விளங்கிய அறிவு நூல்கள் அனைத்தையும் அரபி மொழியில்

பெயர்க்கத் தனி அமைப்பே இயங்கி யது. இதன்மூலம் பல சிறந்த அறிவியல் சிந்தனைகளும், அறிவியல் நூல் களும் மொழிமாற்றம் பெற்று மக் களின் அறிவைத் துரிதமாக வளர்க்கத் துணை நின்றன. இவரது அன்பான அரவணைப்பில் மார்க்க மேதைகள் கலை வல்லுநர்கள், கவிவாணர்கள்) இசை மேதைகள் ஆகியோர் இன்புற்று வாழ்ந்தனர்.

ஒரு சமயம் எதிர்பாராமல் குராஸா வில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. குழப்பவாதிகளை அடக்க இவரே படை நடத்திச் சென்றார். ஸ்னாபாத் எனு மிடத்தில் தங்கியிருந்தபோது திடீரென நோய்வாய்ப்பட்டார். அங்கேயே கால மானார். அப்போது அவருக்கு 86 வயது. வரலாறும் அக்கால இலக்கியங் களும் இவர் பெருமையை வெகுவாகக் கூறுகின்றன.

ஹிஜ்ரத், இச்சொல்லுக்கு இடம் பெயர்தல்' என்பது பொருளாகும். ஒரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு முழுமையாகக் குடிபெயர்ந்து போவதே ஹிஜ்ரத் ஆகும். நபி இப்ராஹீம்(அலை) அவர்களும் அன்னை ஸ்ாராவுடனும் லூத் (அலை) அவர்களோடு ஹர்ரான் எனுமிடத்திற்கு ஹிஜ்ரத் செய்தனர்.

அதன்பின் நிகழ்ந்த ஹிஜ்ரத் உதுமான் (ரலி) அவர்களும் அவர்தம் துணைவியார் ருகையாவும் மற்றும் முஸ்லிம்கள் சிலரும் பெருமா னார் விருப்பப்படி அல்லாஹ்வுக்காக வேண்டி அபிஸினியாவுக்கு மேற் கொண்ட ஹிஜ்ரத் ஆகும். அதற்குப் பிறகு குறைஷியர்களின் கொடுமை தாங்காது அண்ணலார் ஆணைப்படி

முழுமையான