பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

தவராவார். இவரே உமறுப்புலவர் சீறாப்புராணக் காப்பியத்தை இயற்ற பெருமானார்(ஸல்) அவர்களின் வாழ்க் கையை விளக்கிக் கூறியவர். இவ்வூரில் தைக்கா சாகிபு, மாப்பிள்ளை ஆலிம் லெப்பை போன்ற மார்க்க மேதை களும் ஸாஃபி பெண்கவிஞரான செய் யது ஆசியா உம்மா அவர்களும் இவ்வூ ரில் வாழ்ந்து மறைந்தவர்களாவர்.முஸ் லிம் மகான்கள் பலரின் அடக்கவிடங் கள் இவ்வூரில் உள்ளன.

புலவர்கள் பலரைப் பெற்ற பெருமை இவ்வூருக்குண்டு.அவர்களுள் அடைக்கல மாலை இயற்றிய அப்துல் காதர் ஆலிம் புலவர் என்ற சின்ன மரைக் காயர், ஆசாரக்கோவை' பாடிய அப்துல் மஜீதுப் புலவர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். சின்ன சீறா, இராஜநாயகம் போன்ற காப் பியங்கள் தோன்ற இவ்வூர் கொடை நாயகர்கள் காரணமாவர்.

நீண்டகாலத்திற்கு முன் கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் இவ்வூரில் உண்டு. அவற்றுள் சீதக்காதி கட்டிய பெரிய குத்பா பள்ளி குறிப்பிடத்தக்க ஒன்றா கும். பத்துக்கு மேற்பட்ட பள்ளிகள் இவ்வூரில் உண்டு.

மார்க்க ஞான மேதைகள் பலரை உருவாக்கிய புகழ்பெற்ற மதரஸ்ாக்கள் பல இவ்வூரில் உள்ளன. அவற்றுள் புகழ்பெற்ற ஒன்றாக விளங்குவது அருளிய்யா தைக்கா மதரஸ்ாவாகும். இம்மதரஸாவில்தான் குணங்குடி மஸ் தான், ஷைகுனாப் புலவர் போன்றவர்கள் மார்க்கக் கல்வி பெற்றனர்.

புலவர் நாயகம்

இன்றைய மார்க்கக் கல்வி வளர்ச்சி யிலும் இவ்வூர் முன்னணியிலேயே உள் ளது.இவ்வூரின் மேலத்தெருவில் அமைக் கப்பட்டுள்ள உஸ்வத்துன் ஹஸ்னா

குஞ்சலி மரைக்காயர்

முஸ்லிம் சங்கம் பல கல்வி நிறுவனங் கள் உருவாகக் காரணமாயமைந்து வரு கிறது. மேலும் சீதக்காதி டிரஸ்ட் அமைப்பு பள்ளிகளையும் பெண்கள் கல்லூரிகளையும் நடத்திவருகிறது. அவ்வாறே சதக் டிரஸ்ட் என்ற நிறு வனம் பாலிடெக்னிக் கல்லூரியையும் பொறியியல் கல்லூரியையும் மற்றும் பல கல்வி நிறுவனங்களையும் உரு வாக்கி நடத்தி வருகிறது. மிக நவீன முறையில் அமைந்த மருத்துவமனை ஒன்றும் இங்கே இயங்கி வருகிறது.

உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஐந்தாவது மாநாடு இவ்வூரில் 1990ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது.

குஞ்சலி மரைக்காயர் மேலைக் கடற்கரையில் காலூன்ற முனைந்த போர்ச்சுக்கீசியர்களை எ தி ர் த் து ப்

போரிட்ட சுதந்திர வீரர் குஞ்சலி மரைக்காயர். இவர் முன்னோர்கள் சாமுத்திரி மன்னர்களிடம் தளபதி

யாகப் பணியாற்றியவர்கள். குஞ்சலி மரைக்காயர் பிறப்பிடம் பொன்னானி ஆகும். இவருடைய இ ய ற் .ெ ப ய ர் முஹம்மது என்பதாகும். ஆனால், மன்னர் இவரை குஞ்சு அலி' என்று அழைக்கலானார். இதுவே இவரது குடும்பப் பெயராக குஞ்சலி என்று அமைவதாயிற்று. கப்பற்படைத் தள பதிகளாக இருந்ததால் மரைக்காயர்' என்ற அடைமொழி சேர குஞ்சலி மரைக்காயர்’ என அழைக்கப்பட்டார்.

போர்ச்சுக்கீசியர் மேலைக் கடற்கரை யில் பண்டக சாலைகளை அமைத்து, வணிகம் செய்யத் தொடங்கினர். நாளடைவில் அவர்கள் அரசு அதிகாரங் களையும் பெற முயன்றனர். இதைத் தடுத்து போர்ச்சுக்கீசியர்களை அடக் கும் வல்லமை அப்போதைய சாமுத்திரி மன்னர் மானவிக்ரமருக்கு இல்லை.