பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

123


பட்டியைத் தலைமையிடமாகக் கொண்டு ஈரோடு மாவட்டப் பணிகளை மேற்கொண்டார். இவர்தான் “இந்துக்களின் இயல்புகள், பழக்க வழக்கங்கள் மற்றும் சடங்குகள்" என்ற முக்கியமான நூலை எழுதியவர். (1792-1826-AbbeDubous) கத்தோலிக்கமறை மாவட்டம் 1888ல் தொடங்கப்பட்டது. பவானியாற்றின் வடகரைப் பகுதி 1940ல் மைசூருடனும், 1953ஆம் ஆண்டு நீலகிரியுடனும் இணைக்கப்பட்டது.

முதன்முதலில் ஆங்கிலேய புராட்டஸ்ட்டென்ட் குருமார்களான ஹென்றி கிரிஸ்ப் 1827இல் சேலத்துக்கும். வில்லியம் ஆடிஸ் என்பவர் 1830இல் ஈரோடு - கோவை மாவட்டத்திற்கும் இலண்டன் மிஷனரி சங்கத்தாரால் அனுப்பப்பட்டனர். புராட்டஸ்ட்டெண்ட் குருமார்கள் குடும்பத்துடன் வந்ததும் சமயப்பணிகளோடு, கல்வி சமுதாயப் பணிகளை மேற்கொண்டதும் மக்களை மிகவும் கவர்ந்தன, கோவை மாவட்ட ஆட்சியர் ஜான் சல்லிவன் ஈரோடு மாவட்டப்பகுதிப் பணிகளுக்கு உதவி புரிந்தார், ஈரோடு மாவட்டத்தில் முப்பது பள்ளிகள் தொடங்கப் பட்டன. பெரும்பாலும் பள்ளி ஆசிரியர்கள் உபதேசியாராக இருந்ததால் சமயப் பணியும் உடன் செய்யப்பட்டது.

இதற்காகக் கிராமம் கிராமமாகச் சென்று கிறித்துவை அறிய செய்தனர். 1855இல் வெளியிடப்பட்ட கோவைப்பணித்தள அறிக்கை "பத்து உபதேசியார்கள் இவ்வாண்டு முழுவதும் ஆறாயிரம் மைல்கள் கால்நடையாக நடந்தனர். 2375 குக்கிராமங்களையும் சிற்றூர்களையும் சந்தித்தனர். விவிலியப்பிரதிகள் கொடுத்து நற்செய்தி பரப்பினர்" என்று கூறுகிறது.

கிறித்துவ சமயப் பரப்பாலும் தாக்கத்தாலும் தாழ்த்தப்பட்டோர் நிலை உயர்ந்தது. தாராபுரம் பகுதி 1980இல் திருச்சியில் தொடங்கப்பட்ட "கொங்கு நாடு மிஷன்" உடன் இணைக்கப்பட்டது. இது ஆங்கிலேய மிஷன் சங்கத்தாரின் மெத்தாடிஸ்ட் மேற்பார்வையில் இயங்கியது. ஆஸ்திரேலியாவிலிருந்து 1994இல் கோவை வந்த அந்தோணி வாட்சன் பிரப் 1897இல் ஈரோடு வந்தார். 20ஆம் நூற்றாண்டின்