பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

131


வரிவடிவ மாற்றத்துடனும் சொல்லுக்குச் சொல் இடைவெளியின்றியும் முற்றுப்புள்ளி முதலிய குறியீடுகள் இல்லாமலும் வெட்டப்பெற்றிருக்கும். ஈரோடு கலைமகள் கல்வி நிலைய அருங்காட்சியத்திலும், அரசு அருங்காட்சியகத்திலும், வேளாளர் மகளிர் கல்லூரி, வாசவி கல்லூரி அருங்காட்சியகத்திலும் பல சுல்வெட்டுக்கள் உள்ளன.

படி எடுத்தல்

ஈரோடு மாவட்டத்தில் 1891 முதல் கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டன. அவ்வாண்டு ஈரோட்டிலும், கொளிஞ்சிவாடியிலும் சில கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டன. அடுத்து 1905ஆம் ஆண்டு தொடங்கி பல ஆண்டுகள் படி எடுக்கப்பட்டன. 1920ஆம் ஆண்டு பழைய தாராபுரம் வட்டத்தில் கிராமம் தோறும் படி எடுக்கப்பட்டன. 30 ஊர்களில் 183 கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டன.

மெக்கன்சி என்ற நில அளவைத்தலைவர் சில ஆட்களை நியமித்து 1800ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 100 கல்வெட்டுக்களைப் பார்வைப்படியாக எடுக்கச் செய்தார். அண்மைக் காலத்தில் மைய அரசு தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவினர் சில கல்வெட் டுக்களைப் படி எடுத்துள்ளனர்.

கல்வெட்டுக்கள் அழிவு

கோயில் திருப்பணி செய்பவர்கள் முன்பு உள்ள கல்வெட்டுக்களைப் பாதுகாப்பது இல்லை. ஈரோடு மாவட்டத்தில் அகிலாண்டபுரம், அறச்சலூர். ஆனூர், காடையூர், குண்டடம், கொடுமுடி, நத்தக்காரையூர், பவானி, பாரியூர், முத்தூர், வள்ளியறச்சல், வெள்ளோடு ஆகிய ஊர்களில் பெரும்பாலான கல்வெட்டுக்கள் இன்று உரிய இடங்களில் இல்லை, பெரும்பாலும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. ஐம்பது கல்வெட்டுக்களுக்கு மேல் அழிந்துவிட்டன.

கல்வெட்டுக்களுக்கு மேல் சுண்ணாம்பு பூசக்கூடாது என்று அறநிலையத்துறை அறிவித்திருந்தும் சுண்ணாம்பைப் பல ஆண்டுகள்