பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

ஈரோடு மாவட்ட வரலாறு


-பிறம்பு வேலை, கையச்சு, மரப்பொருள், பின்னல் ஆகிய தொழில்கள் கைவினைத் தொழில்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

அரிசி ஆலைகள்

ஈரோடு மாவட்டத்தில் 400 அரிசி ஆலைகள் உள்ளன. அவற்றுள் 150 நவீனப்படுத்தப்பட்ட அரிசி ஆலைகள் ஆகும். தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்தும் ஆந்திரா, கர்நாடகா, மத்தியபிரதேசம் போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் நெல் இம் மாவட்ட அரிசி ஆலைகளுக்கு வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் அரிசி அனுப்பப்படுகிறது. அரிசி ஆலைகள் நெல் அறவையின்போது கிடைக்கும் உமி, தவிடு போன்றவைகளையும் பெரும் அளவில் தயாரிக்கிறது. அரிசி விற்பனைக்கென்றே பல அரிசி மண்டிகள் உள்ளன.

கிராமக் கைத்தொழில் மூலம் கைக்குத்தலரிசியும் கிராமப்புறங்களில் தயாராகிறது.

ஜவுவியின் துணைத்தொழில்கள்

பருத்தித்துணி, ஆயத்த ஆடை உற்பத்தித் தொழிலில் பல்வேறு துணைத்தொழில்கள் நடைபெறுகின்றன. அவை பஞ்சு அறைத்தல், நூற்றல், பாவேற்றுதல், பதப்படுத்துதல், மூக்கேற்றுதல், சலவைத் தண்ணீர் தயார் செய்தல், சலவை செய்தல், சாயமிடுமிடம், பிசிர் எடுத்தல். கஞ்சி போடுதல், தையல், பூவேலைப்பாடு, பின்னல் தேய்த்தல், மடித்தல், வடிவமைத்தல், கணிப்பொறியாளர், பேல் போடுதல், வண்டிகள் பாரமேற்றுதல், முகவர், தரகர் போன்ற பல்வேறு பணிகளைச் செய்பவர்கள் உள்ளனர். இவைகளிலும் கைத்தறியிலும் விசைத்தறியிலும் பணிபுரிவோர் உட்பட மொத்தம் சுமார் 5 இலட்சம் பேர் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

பிறதொழில்கள்

பனை, தென்னை மட்டைகளிலிருந்து நார் தயார் செய்தல், கயிறு திரித்தல், பாத்திரங்கள் செய்தல் போன்ற தொழில்களும் மாவட்டத்தில் விரிவாக நடைபெறுகின்றன.